வரவிருக்கும் ஜனவரி 1, 2022 முதல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர உள்ளது.
இந்த கட்டண அதிகரிப்புக்கு பிறகு ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனலாம்.
ஜனவரி 1, 2022ல் இருந்து கட்டணத்தினை உயர்த்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது.
கட்டணங்கள் அதிகரிப்பு
இந்த அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கிகளில் ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளும் முறை இருந்து வருகின்றது. அதன் பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனைக்கும் கட்டணம்
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு பிறகு இனி 5 முறைக்கு மேலாக வித்டிராவல் செய்யும்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது குறித்து ஜூன் 10, 2021ல் ரிசர்வ் வங்கி அறிவிப்பினை கொடுத்தது. ஆக 5 பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யும் போது கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பணம் அல்லாத பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இலவச பரிவர்த்தனை
இதில் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவச பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். ஆக ஜனவரி 1ல் இருந்து 21 ரூபாய் கட்டணம் + இதனுடன் வரியும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். ஆக தற்போதைய கட்டண விகிதங்களை விட, ஜனவரியில் இருந்து கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏற்கனவே அதிகரிப்பு
ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தினை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் இந்த கட்டணத்தினை உயர்த்த இருக்கிறது.
இது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படவுள்ளது. இது ஏடிஎம் செயல்பாட்டுக்கு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வானது அமலுக்கு வரவுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications