பர்சனல் லோன் வாங்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் அவசியம்னு உங்களுக்கு தெரியுமா? முதல்ல இத பாருங்க..!!

வாழ்க்கையில் கஷ்டங்கள் எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. கஷ்டங்கள் திடீரென எந்த வகையிலும் நம் மீது வரலாம். அப்படியானால், வீட்டில் தங்கம் இருந்தால், பணம் தேவைப்படும்போது தங்கக் கடன் வாங்க முடிவு செய்யலாம். ஆனால் அடமானத்திற்கு சொத்து இல்லாத போது வேறு எந்த கடனும் வாங்க முடியாது. ஆனால், வேலை இருந்தால் ​​தனிநபர் கடன் தான் தீர்வாக இருக்கும்.

சாமானிய மனிதர் ஒருவர் உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து, அதிக வட்டிக்கு பணம் வாங்குவது இன்றளவும் நடந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாக, மீட்டர் வட்டி, கந்து வட்டி என ஏராளமான கொடுமைகள் இன்னும் கிராமபுறங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், இதுலும் பணம் பெறுவது சிக்கலாக இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலானோர் வங்கிக் கடனை அணுகுவதும் உண்டு. அதில், தனிநபர் கடனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களும் உண்டு. வங்கிகள் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.நீங்கள் ஒரு தனிநபர் கடனைப் பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அதற்கான தகுதிகள், தேவைகள் என்னவென்று தெரியவில்லையா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

 பர்சனல் லோன் வாங்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் அவசியம்னு உங்களுக்கு தெரியுமா? முதல்ல இத பாருங்க..!!

தனிநபர் கடன் பெற வங்கிக் கணக்கு வேண்டுமா?: ஆம், தனிநபர் கடன் பெற விரும்பும் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெறுபவர் தனது சம்பளத்தின் அடிப்படையில் கடன் பெறலாம்

தனிநபர் கடன் பெற எவ்வளவு நேரம் ஆகும்?: அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், அனைத்து அரசு அல்லது தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூன்று வேலை நாட்களுக்குள் தனிநபர் கடனை வழங்குகின்றன. ஊதியம் பெறும் பணியாளரின் வங்கி கணக்கு வேறு வங்கியில் இருந்தாலும், அதே வங்கியில்தான் தனிநபர் கடன் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. சம்பள அடிப்படையில் கடனை மற்ற வங்கிகள் மூலம் பெறலாம்.

தனிநபர் கடன் எவ்வாறு வழங்கப்படுகிறது?: தனிநபர் கடன் பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் வங்கி காசோலை அல்லது அவரது வங்கி கணக்கில் நேரடியாக கடன் வழங்கப்படுகிறது. தனிநபர் கடனை வழங்குவதற்கான முழு செயல்முறையும் கடந்த சில ஆண்டுகளில் முற்றிலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எந்த காகித ஆவணங்களும் இல்லாமல் e-KYC மூலம் கடன்கள் விரைவாகவும் குறைந்த நேரத்திலும் அனுமதிக்கப்படுகின்றன.

சில வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்கள் மூலமாகவும் கிரெடிட் கார்டு அடிப்படையிலும் கடன் வழங்குவது மேலும் தனிச்சிறப்பு. டிஜிட்டல் கடன் அனுமதி முறை மூலம் முழு செயல்முறையும் மிக வேகமாகவும் எளிமையாகவும் செய்யப்படுகிறது. ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் சம்பளம் ஆனது, தனிநபர் கடனின் மொத்த வரம்புத் தொகை மற்றும் வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது.

ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பிக்க எளிதானதா?: ஆம் இப்போது ஒவ்வொரு விண்ணப்பமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எனவே கடன் பெற வங்கிகளுக்கு அலைந்து நேரத்தை வீணடிக்காமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் முழு கடன் விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் செயல்முறையை ஆன்லைனில் முடிக்க முடியும். தனிநபர் கடனாக இருந்தாலும் அல்லது வணிகக் கடனாக இருந்தாலும், நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கிடைக்கும்.

தனிநபர் கடனை முழு காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்த முடியுமா?: கடன் காலம் முடியும் வரை நீங்கள் தனிநபர் கடனை செலுத்த வேண்டியதில்லை. பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு கடனை முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+