இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை.
ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மிக எளிதாகப் பொருட்கள் வாங்கலாம். அதோடு மட்டுமல்ல, பல்வேறு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், பொருட்களின் விலையில் தள்ளுபடியை வழங்குகின்றன.
தள்ளுபடியைத் தவிர்த்து ஏடிஎம் கார்டுகள் பல கூடுதல் நன்மைகளைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எனினும் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் அந்தந்த வங்கிகள் 10 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு அளிக்கப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்.
வங்கி சேவையில் வளர்ச்சி
வங்கிகளில் கால் கடுக்க நின்று, பணம் எடுத்த காலம் என்பது கடந்த கால நினைவு. இன்றைய வங்கி என்பது வாடிக்கையாளர்களின் நண்பர்களாக மாறி பல காலமாகிவிட்டது. வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாகக் கிரெடிட் கார்டில் நமக்குத் தெரியாத பல வசதிகள் உள்ளது அப்படிப்பட்ட ஒன்று இந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு.
இலவச காப்பீடு
ஏடிஎம் கார்டுகளின் இத்தகைய பயன்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய பதில் இல்லை என்றால், தொடர்ந்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
வங்கிகள்
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி என ஏற்குறைய அனைத்து வங்கிகளும் தங்களிடம் செயல்பாட்டுக் கணக்குகள் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், விபத்து மற்றும் மரணக் கவரேஜ்-ஐ வழங்கும் காப்பீடுகளை வழங்குகின்றன.
காப்பீட்டு அளவு
காப்பீட்டின் அளவு வாடிக்கையாளரின் வங்கியைப் பொறுத்து மாறுபடுகின்றது. பொதுவாக அனைத்து வங்கிகளும் 50,000 ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலான காப்பீட்டை வழங்குகின்றன.
ஏடிஎம் கார்டு உரிமையாளர்கள்
ஏடிஎம் கார்டு உரிமையாளர்கள் வங்கிகள் வழங்கும் காப்பீடு பற்றி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அறிய விரும்புவதில்லை. அதாவது பரவாயில்லை. சம்பந்தப்பட்ட வங்கிகளே அவர்களது வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடு பற்றிய நேரடித் தகவல்களைத் தருவதில்லை.
கார்டு வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடு
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இப்போது தங்களுடைய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், உங்களுடைய வங்கிக் கணக்கு செயலிழந்தால், உங்களுடைய காப்பீட்டை அந்தந்த வங்கிகள் திரும்பப் பெறலாம்.
காப்பீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி?
ஏடிஎம் கார்டுகளோடு வழங்கப்படும் காப்பீட்டைப் பற்றிய தகவல் மிகவும் அரிதாகவே மக்களைச் சென்று சேருகின்றது. எனவே இந்தத் திட்டத்தில் காப்பீடு கோரி விண்ணப்பிக்கும் வழக்கமும் மிகவும் அரிதாகவே உள்ளது.
விபத்து
ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் நபர் விபத்தில் சிக்கியவுடன், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது தான் காப்பீடு கோரும் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். விபத்தில் பாதிக்கப்பட்டவரைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மிகவும் கவனமுடன் அந்த நபரின் உறவினர் பராமரிக்க வேண்டும்.
பில், ஆவணங்கள் முக்கியம்
சம்பந்தப்பட்ட நபர் ஒரு வேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடைய எல்லா மருத்துவப் பதிவுகளையும் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை துரதிருஷ்டவசமாக அந்த நபர் இறக்க நேர்ந்தால், இறந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை, காவல் துறை அறிக்கை, இறப்புச் சான்றிதழ் மற்றும் இறந்த நபரின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளில் ஏதேனும் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
60 நாட்களில் பரிவர்த்தனை
இறந்த நபர் கடந்த 60 நாட்களில் சில செல்லுபடியாகும் பரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கட்டாயம் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
காப்பீட்டு அளவு
விபத்து மரணக் காப்பீடு, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரை, ஒரு நபர் பயன்படுத்தும் கார்டின் வகையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக இது ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வரை வேறுபடும். இத்தகைய காப்பிடுகளை வங்கிகள் இலவசமாக வழங்குவதாகச் செபியில் பதிவுசெய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் கூறினார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications