சென்னை: வருமான வரி ஏய்ப்புகளை தடுப்பதற்காக வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட கணக்கில் அதிக அளவிலான பண பரிமாற்றம் நடக்கிறது என்றால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உடனடியாக அந்த தகவலை வருமான வரித்துறைக்கு தெரிவித்தாக வேண்டும்.
வருமான வரித்துறை நம்முடைய கிரெடிட் கார்டு பயன்பாடுகளை கண்காணிக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்தியாவில் தற்போது கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கையில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதியும் பல்வேறு வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயிண்டுகள், தள்ளுபடிகள் மற்றும் கேஸ் பேக் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதும் இளைஞர்களை கிரெடிட் கார்டுகளை நோக்கி தள்ளுகிறது.

இவ்வாறு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லை என்றால் அவர்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும். அதன் பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம். உங்களின் கிரெடிட் கார்டு பில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலே வருமான வரித்துறை உங்களின் வருமானம் மற்றும் நீங்கள் பணத்தை செலவு செய்யும் விதம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.
அதாவது உங்களுடைய வருமானமும் நீங்கள் செலவு செய்யும் விகிதமும் எந்த அளவில் இருக்கிறது என்பதை வருமான வரித்துறை கண்காணிக்க தொடங்கும். உங்கள் கிரெடிட் கார்டு பில் 1லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது, கிரெடிட் கார்டை கொண்டு ஒரே சமயத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்றால் அந்த பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் அனைத்தையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வருமானவரித்துறைக்கு அனுப்பி விடும்.
இதனை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கையும் அதில் உங்களுடைய வருமானம் எவ்வளவு தற்போது நீங்கள் செலவு செய்யும் விதம் எவ்வளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பொருந்துகிறதா என பார்ப்பார்கள் உங்களுடைய வருமானத்தை விட நீங்கள் செய்யும் செலவு பல மடங்காக இருந்தால் உங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை உங்களுக்கு நோட்டீஸ் வருகிறது என்றால் நீங்கள் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று உங்களுடைய வருமானம் எவ்வளவு நீங்கள் செலவு செய்த பணத்திற்கான வருமான ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பதை விளக்கி ஆக வேண்டும். இதனை தவறினால் வருமான வரித்துறை உங்களுக்கு கூடுதல் வரி அல்லது அபராதம் விதிக்க நேரிடலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications