செயல்படாத EPFO கணக்குகளில் மோசடிகளை தடுக்க புதிய வழிமுறைகள்..!

செயல்படாத மற்றும் பரிவர்த்தனைகள் நிகழாத EPFO கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், அதில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கும் EPFO புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட காலம் செயல்படாத கணக்குகளில் இருந்து முறையற்ற வகையில் பணம் பெறப்படுவதை தடுக்க இந்த புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பரிவர்த்தனைகள் நிகழாத (transaction less) மற்றும் செயல்படாத கணக்குகளை (inoperative and inactive) மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மோசடி அல்லது அடையாளத் திருட்டு போன்றவை நிகழாத வகையில் செயல்பட வேண்டும் என கள அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது.

செயல்படாத EPFO கணக்குகளில் மோசடிகளை தடுக்க புதிய வழிமுறைகள்..!


மூன்று ஆண்டுகளில் எந்த பரிவர்த்தனையும் அதாவது காலமுறை வட்டி வரவு தவிர வேறு எந்த டெபிட் அல்லது கிரெடிட் நடக்காத கணக்குகள் பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் என வரையறுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் நடக்காததால் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளை செயலற்ற கணக்குகளாக கருதலாம் என்றும் EPFO கூறுகிறது.

தற்போது திருத்தப்பட்ட வரையறையின்படி ஒரு கணக்கு 58 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது ஓய்வு பெற்ற 55 வயதுக்கு பின் 36 மாதங்களுக்குப் பிறகு செயல்படாத கணக்காக இருக்கும். திருத்தப்பட்ட வரையறைபடி உறுப்பினர் 58 வயதை அடைந்த பிறகு ஒரு கணக்கு செயல் இழந்ததாக வகைப்படுத்தப்படும்.

எனவே தற்போது செயல்படாத கணக்குகளை Unblock செய்வதற்கு புதிய நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கணக்கு உரிமையாளர் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ இதற்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அந்த EPFO கணக்கில் UAN இல்லை என்றால் முதலில் அந்த கணக்கிற்கு UAN எண்ணை உருவாக்க வேண்டும். இதனை கள அலுவலர்கள் மட்டுமே செய்ய முடியும். செயல்படாத அல்லது பரிவர்த்தனை நிகழாத கணக்குகளுக்கு , கணக்கு உரிமையாளர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய சரிபார்ப்புகளை முடித்துவிட்டு அலுவலர்கள் UAN எண்ணை உருவாக்குவார்கள். இதனை அடுத்து பான், ஆதார், வங்கி கணக்கு எண் ஆகியவைகொண்டு கேஒய்சி செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு கணக்கு உரிமையாளர் தன்னுடைய கணக்கை unblock செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும். கணக்கு உரிமையாளரால் நேரடியாக அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை எனும் போது ஆன்லைனில் இதற்கான கோரிக்கையை முன் வைத்தால் அதிகாரியே நேரடியாக வீட்டிற்கு வந்து கணக்கினை சரி பார்ப்பார்.

பரிவர்த்தனை நிகழாத கணக்குகளில் சரிபார்ப்பு நடைமுறைகளை செய்வதற்கு அதிகாரிகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து அந்த உறுப்பினர்களின் தகவல்களை சரி பார்க்க வேண்டும் என EPFO கூறியுள்ளது. அந்த குறிப்பிட்ட நபர் பணி செய்த நிறுவனத்தில் தற்போது ஆக்டிவாக இருக்கக்கூடிய UAN கணக்கு உரிமையாளர்களுக்கு தகவல்களை அனுப்பி உறுதி செய்வது என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே UAN இணைக்கப்பட்டு கேஒய்சி நடைமுறைகள் முடிக்கப்பட்ட கணக்குகளுக்கு Unblock கோரிக்கையை ஆன்லைன் வாயிலாகவே முன் வைக்கலாம். கணக்கு உரிமையாளர் இறக்கும்பட்சத்தில் அவர்களின் நாமினி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கில் இருக்கும் பணத்தை கோரலாம்.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+