நீங்கள் எஸ்.ஐ.பி மூலமா முதலீடு செய்யுறவர்ரா? அப்படின்னா நிச்சயம் இந்த செய்திய படிங்க.
பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், நிச்சயம் உங்கள் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படலாம். ஏனெனில் ஆதார் பான் இணைப்பு செய்யாவிட்டால், உங்கள் கே.ஓய்.சி செல்லாது. அதன் பிறகு எஸ் ஐ பி திட்டமும் செயல்படாது.
ஆக ஜூன் 30 கடைசி தேதி என்பதால் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
மீண்டும் அவகாசம் கிடைக்குமா?
ஏனெனில் இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது ஆதார் பான் இணைப்புக்கு பல முறை கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆக இந்த முறையும் இணைப்புக்கு கால அவகாசம் கிடைக்குமா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஆக உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும்.
அபராதம் உண்டு
அதோடு வருமான வரிச் சட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். உங்கள் பான் கார்டு செல்லாமல் போகலாம் என்பதோடு, உங்களது முதலீடுகளிலும் இது பாதிப்பினை ஏற்படுத்தலாம். இது இணைப்புக்கு பிறகு மீண்டும் செயல்படும் என்றாலும், பாதிப்பு என்பது நிச்சயம் இருக்கும்.
மொபைல் நம்பர் மூலம் இணைக்கலாம்
ஆக அரசின் அறிவிப்புக்கு ஏற்ப உங்களது ஆதார் பான் நம்பரினை ஜூன் 30க்குள் இணைத்து விடுங்கள். அதெல்லாம் சரி இதனை எப்படி மொபைல் SMS மூலம் இணைக்கலாம். இதற்காக நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் மூலமாக இணைக்கலாம்
ஆன்லைனில் இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற வருமான வரித்துறையின் வலைதளத்திற்கு செல்லவும்.
வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.
இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
இதன் பின்பு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
நேரிலும் சென்று ஆதாரை இணைக்கலாம்
ஆன்லைனிலோ அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவே இணைக்க முடியாவிட்டால், நீங்கள் நேரில் சென்றும் இணைக்கலாம். இதற்காக நீங்கள் சேவை மையத்திற்கு சென்று Annexure-I நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது பான் அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கு கட்டணம் உண்டு.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications