செபி பங்குச்சந்தை முதலீட்டையும், அதை கையாளும் விதத்தை தொடர்ந்து எளிமைப்படுத்தி வருகிறது. அப்படி சமீபத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தி அளித்தது செபி.
இந்தியாவில் பல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கே தெரியாத ஒரு வசதி உள்ளது. அதாவது நீங்கள் முதலீடு செய்து வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்காமலேயே, டீமேட் கணக்கு இல்லாமல் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.
இதன் மூலம் நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG) செலுத்துவதை முற்றிலும் தவிர்க்கப்படலாம் அல்லது பெரிய அளவில் குறைக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

எப்படி வரி சேமிக்க முடியும்?
நீங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வருமானம் குறைவாக உள்ள குடும்ப உறுப்பினருக்கு (மனைவி, குழந்தைகள், பெற்றோர், சகோதரர்கள் போன்றவர்கள்) பரிசாக அளித்தால், அவர்கள் அதை விற்கும்போது வரி மிகக் குறைவாகவோ அல்லது ஜீரோவாகவோ இருக்கும்.
மேலும் புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை மூலதன ஆதாயம் வருமானத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மொத்த வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் கீழே இருந்தால் ரூ.12 லட்சம் வரை வருமானத்திற்கு வரி விதிப்பு இல்லாமல் போகும்.
இதேபோல் நீங்கள் கிஃப்ட் ஆக அளிக்கப்பட்ட பின்பு,ம் நீங்கள் வாங்கிய நாளில் இருந்து தான் இந்த சொத்துக்கள் கணக்கிடப்படும். அதனால் பழைய வைப்பு காலமும் (holding period) தொடர்வதால் நீண்டகால வரி சலுகை தொடர்கிறது. இந்த வழியில் பல கோடி ரூபாய் வரியை சட்டப்படி சேமிக்க முடியும்.
யாருக்கு பரிசளிக்கலாம், யாருக்கு முடியாது?
வருமான வரி சட்டப்படி குறிப்பிட்ட உறவினர்களுக்கு (மனைவி/கணவன், சகோதரன், சகோதரி, பெற்றோப், குழந்தைகள், பேரன்/பேத்தி போன்றவர்கள்) பரிசளித்தால் முற்றிலும் வரி இல்லை. ஆனால் நண்பர்கள், சக ஊழியர்கள் போன்றவர்களுக்கு ரூ.50,000க்கு மேல் பரிசளித்தால் முழு தொகையும் "Income from Other Sources" என்று கருதப்பட்டு வரி விதிக்கப்படும். எனவே உறவினர் பட்டியலை சரியாகப் பார்த்து செயல்படுத்த வேண்டும்.
எப்படி பரிசளிப்பது? -எளிய வழிமுறை
- CAMS, KFintech அல்லது MF Central இணையதளத்தில் சென்று "Transfer of Units" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதன் பின்பு உங்கள் பான், மின்னஞ்சல், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும்.
- பரிசளிக்கும் ஃபண்ட், யூனிட் எண்ணிக்கை, பெறுநரின் பான், ஃபோலியோ எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
- இரு தரப்புக்கும் OTP வரும், அதை உறுதிப்படுத்தியதும் இரண்டு வேலை நாட்களில் பரிமாற்றம் முடிந்துவிடும்.
- வேறு எந்த ஆவணமும் தேவையில்லை.
இந்த வசதி நீண்டகால முதலீட்டாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், வீட்டில் இருப்பவர்கள், குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு பெரும் பயன் தரும். பலர் இதைப் பயன்படுத்தாமல் அதிக வரி செலுத்துகின்றனர். சட்டப்படி அனுமதிக்கப்பட்ட இந்த வாய்ப்பை சரியான உறவினர்களுடன் பயன்படுத்தினால் பல லட்சம் ரூபாய் வரியை சேமிக்கலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications