வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

தங்கம் விலை உயரும் போது வெள்ளியின் விலையும் அதிகரிக்கிறதே என்று அவசரப்பட்டு முதலீடு செய்கிறீர்களா? அதை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். வெள்ளி முதலீடு என்பது நீங்கள் நினைப்பது போல ஒரு பாதுகாப்பான சொத்து (Asset Class) அல்ல. அது ஒரு ஆபத்தான ஸ்மால்-கேப் பங்கு போன்றது என்று எச்சரிக்கிறார் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டின் சங்கரன் நரேன்.

தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக திகழும் வேளையில், வெள்ளி மட்டும் ஏன் இவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறது என்ற கேள்வியானது பல முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. லாபம் தரும் போது அள்ளி கொடுப்பதும், சரிந்தால் அதல பாதாளத்திற்கு செல்வதும் வெள்ளியின் இயல்பு. இது புரியாமல் ஒட்டுமொத்த பணத்தையும் வெள்ளியில் கொட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை எனலாம்.

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

வெள்ளி முதலீட்டில் ஒளிந்திருக்கும் அந்த பெரிய ரிஸ்க் என்ன? நிபுணர்கள் ஏன் இதை ஒரு ஸ்மால் கேப் போன்று ரிஸ்க் நிறைந்த முதலீடு என்கிறார்கள்? உங்கள் போர்ட்ஃபோலியோவில் வெள்ளிக்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும்? முழுமையாக தெரிந்து கொள்வோமா?

MFD கேலக்ஸி 16வது அறிவுசார் மாநாட்டில் இது குறித்து பேசிய சங்கரன், வெள்ளி குறுகிய காலத்தில் பெரிய அளவில் லாபத்தை தரக்கூடியது என்றாலும், அதை தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடாகக் கருதக் கூடாது. வெள்ளி என்பது ஒரு ஸ்மால்-கேப் பங்கு போன்றது. அதன் செயல்பாடுகளும் ஒரு ஸ்மால்-கேப் பங்கு போலவே தான் இருக்கும். ஆக அதை ஒரு நிலையான சொத்து வகுப்பாக கருத முடியாது.

பல முதலீட்டாளர்களும் வெள்ளியை தங்கத்துடன் சேர்த்து ஒரு முக்கிய முதலீட்டுப் பிரிவாக தவறாக கருதுகின்றனர். ஆனால் வெள்ளியின் ரிஸ்க் தன்மை தெரிவதில்லை. ஸ்மால்-கேப் பங்குகள் அதிக ஏற்ற இறக்கங்களுக்கும், நீண்ட கால அளவில் கணிக்க முடியாத முடிவுகளுக்கும் பெயர் பெற்றவை. நீங்கள் ஒரு ஸ்மால்கேப் பங்கில் முதலீடு செய்யும் போது, அபாயங்கள் மிக அதிகம். குறுகிய காலம் மிகச் சிறப்பாக இருக்கும், ஆனால் நீண்ட கால அளவில் ஒரு பங்கின் நிலை எப்போதும் ஆபத்தானது. ஏனெனில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அதேபோன்று தான் வெள்ளியில் பணத்தை முதலீடு செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதற்கு நேர்மாறாக சில பொருளாதார சூழல்களில் தங்கம் ஒரு சொத்து வகுப்பாக கருதலாம். இருப்பினும் உலகளாவிய கரன்சி சூழல் குறித்து முதலீட்டாளர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றால், தங்கத்தை கூட ஒரு இயல்பான முதலீடாக கருத வேண்டிய அவசியமில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்று உறுதியாக நம்பினால் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

அத்தகைய பொருளாதார கணிப்புகள் இல்லாதபட்சத்தில், நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதை விட, மல்டி-அசெட் ஃபண்டுகள் போன்ற பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

வெள்ளியின் கவர்ச்சி என்பது அதன் வேகமான விலை மாற்றங்களில் தான் உள்ளது. இது நிலைத்தன்மையை விரும்புவோரை விட, விறுவிறுப்பை தேடும் முதலீட்டாளர்களையே ஈர்க்கிறது. இது உங்களுக்கு தினசரி விறுவிறுப்பை தரும். தங்கம் அந்த அளவுக்கு விறுவிறுப்பை தராது. ஆனால், நீங்கள் டாலர் மதிப்புக்கு எதிராக இருந்தால், தங்கம் ஒரு சிறந்த சொத்து வகுப்பு. மற்றபடி, மல்டி-அசெட் ஃபண்டுகளின் ஒரு பகுதியாக மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். ஆக வெள்ளியை நீண்ட கால போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியாக கருதுவதற்கு முன்பு, அதில் உள்ள அபாயங்களை முதலீட்டாளர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளி வர்த்தக வாய்ப்புகளை வழங்கினாலும், ஒரு ஒழுங்குமுறை முதலீட்டு கட்டமைப்பில் அதை ஒரு முக்கிய சொத்து வகுப்பாக கருத கூடாது என்று எச்சரித்துள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+