MCX சந்தையில் வெள்ளி விலை பிப்ரவரி 5ஆம் தேதி வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 9 சதவீதம் சரிந்துள்ளது. ஆசிய சந்தையின் வர்த்தகம் துவங்கிய போது நிலையான வர்த்தகத்தை பெற்று வந்த நிலையில், திடீரென பெரும் முதலீட்டாளர்கள் வெள்ளியை பணமாக்க முடிவு செய்த காரணத்தால் தடாலடியாக விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக உலக ஸ்பாட் விலை 91 டாலரில் இருந்து தற்போது 74 டாலர் வரையில் சரிந்துள்ளது.
இந்த வீழ்ச்சி அப்படியே இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை ஒரு கிலோக்கு ரூ.24,196 குறைந்து ரூ.2,44,654ஆக வர்த்தகமாகிறது. இது சில நிமிடங்களில் ஏற்பட்ட பெரும் இழப்பு. இதேபோல் ரீடைல் சந்தையில் 1 கிலோ விலை 20000 ரூபாய் குறைந்து 3 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது, மேலும் மாலை வர்த்தக நேரத்திலும் வெள்ளி விலை குறையலாம் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் 6% சரிவு
MCX வெள்ளி விலை இன்று வர்த்தகம் தொடங்கிய போது 6 சதவீதம் சரிந்தது. இதன் பிறகு இழப்பின் அளவு 9 சதவீதமாக அதிகரித்தது. உலக ஸ்பாட் விலை 90 டாலரில் இருந்து 75 டாலருக்கு கீழே வீழ்ந்ததால் இந்த தாக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 13 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது. இது வெள்ளி சந்தையில் கடும் ஏற்ற இறக்கத்தை உருவாக்கியுள்ளது.
சில்வர் ETF 13-15% சரிவு
வெள்ளி விலை சரிவால் சில்வர் எக்ஸ்சேஞ்ச் டிரேடிங் ஃபண்ட்கள் (ETFs) 13 முதல் 15 சதவீதம் வரை அதன் மதிப்பை இழந்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில் மார்ஜின் டிரேடிங் ஃபெசிலிட்டி (MTF) புத்தகத்தில் அதிக லெவரேஜ் கொண்ட சொத்துகளாக உள்ளன. பிப்ரவரி 4 அன்று நிப்பான் AMC சில்வர் ETFக்கு ரூ.1,300 கோடிக்கு மேல் லெவரேஜ் நிலைகள் இருந்தன. இன்றைய இழப்பு வெள்ளி முதலீட்டாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக வெள்ளி விலை ஏன் சரிகிறது?
உலக ஸ்பாட் வெள்ளி விலை $90லிருந்து $75க்கு கீழ் வீழ்ந்துள்ளது. ஆசியா-பசிஃபிக் வர்த்தகம் தொடங்கிய போது $90ஐ தக்க வைக்க முயன்றது. ஆனால் சில நிமிடங்களில் 13 சதவீதம் சரிந்தது. இது வெள்ளி சந்தையில் தொடரும் ஏற்ற இறக்கத்தை காட்டுகிறது. மேலும் சீனா முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை அதிகளவில் விற்பனை செய்தவதாகவும் கருத்து நிலவுகிறது. ஏற்கனவே அமெரிக்கா முதலீட்டு வங்கிகள் வெள்ளியை விற்பனை செய்த காரணத்தால் தான் 121 டாலரில் இருந்து 90 டாலருக்கு குறைந்தது, தற்போது சீனாவும் துவங்கியுள்ளதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களில் வெள்ளி உச்சம்
MCX வெள்ளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் உச்சம் தொட்டது. ஆனால் கடந்த வார சரிவு அதை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தது. இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தங்க ETFகளுக்கும் சரிவு
வெள்ளி சரிவுடன் தங்க ETFகளும் இன்று 4 முதல் 6 சதவீதம் வரை இழந்துள்ளன. ஆனால் ஸ்பாட் தங்க விலை வெள்ளியை போல அதிகம் சரியவில்லை. இது தங்க சந்தை ஓரளவு நிலையாக இருப்பதை காட்டுகிறது.
ஆனால் நீண்டகால அடிப்படையில் வெள்ளி விலை மீண்டும் உயரலாம், வெள்ளி உலோகத்திற்கு தொழிற்துறையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இதன் விலை தொடர்ந்து உயர வாய்ப்புகள் உள்ளது. ஆனால் முதலீட்டாளர்களின் தலையீடும், லாபம் பார்க்கும் முடிவுகளும் இதன் விலையை தொடர்ந்து தடுமாற செய்கிறது. இதனால் ETFகளில் முதலீடு செய்தவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். உலக சந்தை ஏற்ற இறக்கம் தொடரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications