Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

பொதுவாக தங்கம் விலை ஏறினால் வெள்ளியும் ஏறும், இறங்கினால் பின் தொடரும். ஆனால் இன்று (ஏப்ரல் 2, 2026), தங்கம் சற்று தடுமாறிக் கொண்டிருக்க, வெள்ளி சூப்பர் பாஸ்ட் வேகத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் கிலோவுக்கு சுமார் 14,600 ரூபாய்க்கும் மேல் சரிந்து (சுமார் 6% வீழ்ச்சி) முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஈரான் குறித்து அதிரடி உரை, டாலர் மதிப்பு உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என அனைத்தும் சேர்ந்து வெள்ளை தங்கத்தை நிலைகுலைய செய்துள்ளன. தங்கம் விலை ஏறுதே என வருத்தப்பட்டவர்களுக்கு, வெள்ளி விலை குறையுதே என ஒரு பக்கம் குஷி பிறந்தாலும், இது வாங்குவதற்கான நேரமா அல்லது இன்னும் குறையுமா என்ற குழப்பமும் எழுந்துள்ளது. வெள்ளியின் இந்த மெகா சரிவுக்கு பின்னால் இருக்கும் அந்த 3 பலமான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

இந்திய கமாடிட்டி சந்தையில் பியூச்சர் தங்கத்தின் விலை 2.88% குறைந்து அல்லது 4,425 ரூபாய் குறைந்து, 1,48,283 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகின்றன. இதே வெள்ளி விலை கிலோவுக்கு 6% அல்லது 14,610 ரூபாய் குறைந்து, 2,28,891 ரூபாயாகவும் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலையானது குறைந்து வரும் நிலையில், ஸ்பாட் தங்கத்தின் விலை 2% குறைந்து, 4,664.39 டாலராக காணப்படுகிறது. இதே அமெரிக்க பியூச்சர் தங்கத்தின் விலை 4,691.1 டாலராகவும் காணப்படுகிறது. இந்த சரிவானது முன்னதாக அதன் இரண்டு வார உச்சத்தை எட்டிய நிலையில் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 19-க்கு பிறகு எட்டிய உச்சமாகும்.

Also Read

ஏன் இந்த சரிவு?

அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் எச்சரிக்கைக்கு மத்தியில் சரிவை கண்டு வருகிறது. இந்த எச்சரிக்கையானது கச்சா எண்ணெய் விலையை மேற்கொண்டு உயர்த்தி வரும் நிலையில், அது பணவீக்கத்தை தூண்டலாம் என்ற அஞ்சப்படுகிறது. இதுவே மத்திய வங்கிகளின் வட்டி குறைப்பு நடவடிக்கைகளை குறைக்க வழிவகுக்கலாம். பொதுவாக வட்டி விகிதம் குறையாது என்பதும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவை ஏற்படுத்தலாம். ஏனெனில் வட்டி விகிதம் குறையாது என்ற நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து, பத்திரங்கள் போன்றவற்றில் முதலீட்டை செய்யலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையும்.

மறுபக்கம் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, அது பணவீக்கத்தை உண்டாக்கும். இது சந்தையில் ஒரு நிச்சயமற்ற சூழலை உருவாக்கும். இது விலை உயர்ந்த உலோகங்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Recommended For You

வெள்ளி ஏன் அதிகமாக சரிவு?

தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி ஏன் அதிக அளவில் சரிவைக் கண்டு வருகிறது. தங்கம் பொதுவாக பாதுகாப்பு புகலிடமாக இருக்கலாம். ஆனால் வெள்ளி அப்படி இல்லை, அது ஒரு தொழில்துறை உலோகம். இது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், வெள்ளியின் தேவை குறைய வழிவகுக்கலாம் என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் குறுகிய காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே அதிக ஏற்ற இறக்கத்தை காணலாம். இது எண்ணெய் விலை மற்றும் ஈரான் பிரச்சனையை பொறுத்து மாறுபடலாம்.
தங்கம் பாதுகாப்பு புகலிடம் என்பதால் சற்று மெதுவான போக்கு இருக்கும். பெரிய அளவில் சரிவு இருக்காது.
ஆனால் வெள்ளி அப்படியல்ல. ஆக ஏற்றமாக இருந்தாலும், இறக்கமாக இருந்தாலும் பெரிய அளவில் இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+