2025ஆம் ஆண்டில் மிக அதிக லாபம் கொடுத்த சொத்துகளில் ஒன்றாக இருந்த வெள்ளி (Silver), 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அதிவேக ஏற்றத்திற்குப் பிறகு தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த எதிர்பாராத மாற்றம், நீண்டகால முதலீட்டாளர்களையும் குறுகியகால வர்த்தகர்களையும் ஒரே நேரத்தில் பாதித்து, சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெள்ளி தான் அடுத்த தங்கம் என நினைத்து பல கோடி மக்கள் வெள்ளி விலை அதிகமாக இருந்த போதும் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்தவர்கள் தற்போது பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

வரலாற்று உச்சத்தில் இருந்து திடீர் வீழ்ச்சி
2025ஆம் ஆண்டில் 170% வரை உயர்ந்த வெள்ளி, 2026 ஜனவரியிலும் மேலும் 74% உயர்வை பதிவு செய்தது. ஆனால் இந்த அதிவேக ஏற்றம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தற்போது, 2026ஆம் ஆண்டில் மொத்தமாக 4% சரிவை பதிவு செய்து வெள்ளி முதலீட்டாளர்களை கதறவிட்டு வருகிறது.
மேலும், 2026 மே மாத பியூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் வெள்ளி விலை, கிலோக்கு ரூ.4.39 லட்சம் என்ற உச்சநிலையிலிருந்து தற்போது ரூ.2.15 லட்சத்திற்கு கீழ் சரிந்துள்ளது. வெறும் இரண்டு மாதங்களில் ரூ.2.23 லட்சத்திற்கும் மேல் மதிப்பு குறைந்திருப்பது முதலீட்டாளர்களை பெரும் நெருக்கிடிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த மோசமான சரிவுக்கு என்ன காரணம்..? ஒன்னுல்ல ரெண்டுல்ல மொத்தம் 3 காரணம் உள்ளது.
காரணம் 1: அமெரிக்க டாலர் வலிமை
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அமெரிக்க டாலரின் வலிமை ஆகும். டாலர் குறியீடு (DXY) பிப்ரவரி மாதத்தில் 97 அளவிலிருந்து மார்ச் மாதத்தில் 100.15 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், டாலர் வலுவாகும் போது மற்ற நாணயங்களை பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு வெள்ளியின் முதலீடு செய்யும் போது கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும். இதனால் முதலீட்டு மற்றும் உலோக தேவைகள் இரண்டும் குறைந்து, விலை குறைய துவங்கியுள்ளது.
காரணம் 2: லாபம் எடுக்கும் நடவடிக்கை
வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பிறகு, பல முதலீட்டாளர்கள் வெள்ளி விலை சரிவதை உணர்ந்து கிடைத்த லாபம் போதும் என்ற திட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் 2 மாதத்தில் 2.23 லட்சம் ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் அதிகமான காரணத்தால் முதலீட்டு சந்தை தலைகீழாக மாறியது. இதனால் முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை விட, ஏற்கனவே பெற்ற லாபத்தை பாதுகாப்பதே முக்கியமாக பார்க்க துவங்கினர்.
இந்த profit booking செயல்பாடு, வெள்ளி விலையை மேலும் கீழே தள்ளியுள்ளது. பொதுவாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் வெள்ளி, இந்த முறை எதிர்பாராத விதமாக விற்பனை அழுத்தத்தை சந்தித்துள்ளது.
காரணம் 3: தொழில்துறை தேவையில் குறைவு
வெள்ளி பயன்பாட்டில் 60% க்கும் மேல் தொழில்துறை தேவையாகும். குறிப்பாக மின்சாதனங்கள், சோலார் பேனல்கள், பேட்டரிகள் போன்ற துறைகளில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், China மற்றும் Europe பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால், தொழில்துறை உற்பத்தி குறைந்து, வெள்ளி தேவையும் தளர்ந்துள்ளது. இதுவும் விலையை பாதித்த முக்கிய காரணமாகும். போர் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் காரணமாகவும் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பாதிக்கும். இதனால் வெள்ளிக்கு தொழிற்துறையில் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.
சப்ளை பிரச்சனை
இவை அனைத்தையும் தாண்டி நீண்டகால பார்வையில் பார்க்கும் போது வெள்ளி-க்கு சில சாதகமான விஷயங்களும் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெள்ளி சப்ளை குறைவாக இருந்து வருகிறது. தற்போது இது ஆறாவது ஆண்டாகவும் தொடர்கிறது.
மேலும், Shanghai Futures Exchange-இல் இருப்பு அளவுகள் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தி துறைக்கு அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. உற்பத்தியில் தேக்கம், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த இருப்புகள், வெள்ளி கிடைக்கும் அளவை சுருக்குகின்றன.
இதனால் டிமாண்ட் அதிகமாகும் பட்சத்தில் சப்ளை குறைவது மூலம் இதன் விலை உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு பொருளாதாரமும், உற்பத்தி துறையும் சாதகமாக இருக்க வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்
குறுகிய காலத்தில் வெள்ளி விலை மீதான நெருக்கடி தொடரலாம். ஆனால் தொழில்துறை பயன்பாடு மற்றும் சப்ளை பற்றாக்குறை காரணமாக, நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் விலைகள் மீண்டும் நிலைநிறுத்தப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் வெள்ளிக்கு தங்கம் போன்ற பாதுகாப்பு இல்லாத காரணத்தால் வெள்ளியில் பெரிய லாபம் பார்க்கும் இலக்குடன் முதலீடு செய்ய வேண்டாம். இதை பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்க கூடாது என்பது தான் அட்வைஸ்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications