கடந்த ஆண்டில் தங்கத்தை விட போட்டி போட்டுக் கொண்டு வெள்ளியின் விலை உயர்ந்தது. ஒரே ஆண்டில் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்ததால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளி தான் புதிய தங்கம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் ஜனவரி மாதத்திற்கு பிறகு வெள்ளி விலை சரிவடைந்தது.
சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்ற உச்சபட்ச விலை எட்டியது. வெள்ளியை பொருத்தவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தான் படிப்படியாக விலை ஏறியது. து இந்த ஆண்டு ஜனவரியில் உச்சபட்ச விலை ஏற்றி அதன் பின்னர் படிப்படியாக சரிவடைந்தது. பிப்ரவரி மாதத்தில் விலை சரிவடைய தொடங்கியது அடுத்து வெள்ளியின் விலை பெரிய அளவில் ஏறவில்லை 3 லட்சம் ரூபாயிலிருந்து 2.5 லட்சம் ரூபாய் என்ற வரம்புக்குள்ளாகவே தான் வெள்ளியின் விலை வர்த்தகமாக வருகிறது.

இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஜனவரி 29ஆம் தேதி அன்று 4,20,000 ரூபாய் என்ற வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது . அதுவே தற்போது 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் என்று அளவில் இருக்கிறது. அதாவது உச்சபட்ச விலை லிருந்து 1,77,000 ரூபாய் ( 42 சதவீதம்) வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது.
கடந்த 2 மாதங்களாக வெள்ளி விலை பெரிய அளவில் உயரவே இல்லை. கிணற்றில் போட்ட கல்லாகவே விலை அப்படியே இருக்கிறது. இந்த சூழலில் வெள்ளியை இப்போது வாங்கலாமா வேண்டாமா அல்லது இன்னும் சில காலத்திற்கு இப்படியேதான் விலை நீடிக்குமா என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் நீடிக்கிறது.
கடந்த சில காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் , வெள்ளி உள்ளிட்டவை இனி படிப்படியாக உயர தொடங்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதாவது ஈரான் அமெரிக்கா இடையிலான போர் அமைதிக்கு வருவது, கச்சா எண்ணெய் விலை குறைவது ஆகியவை பணவீக்கம் தொடர்பான அச்சத்தை குறைத்து இருக்கிறது. இதனால் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் லேசாக உயர்ந்து வருகின்றன என கூறுகின்றனர்.
அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் வெள்ளி விலையில் ஈரான் போர் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடுகின்றனர். ஒருவேளை ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுகிறது எனும்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் உயரும்.
தற்போதைய சூழலில் உலக சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 76 டாலர்கள் என்ற அளவில் வர்த்தகமாகிகிறது. இது அடுத்த வரக்கூடிய நாட்களில் சற்று உயரும் என கணிக்கிறார் என்ரிச் மணி நிறுவனத்தின் பொன்முடி. இது 80 டாலரை கடந்துவிட்டால் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி செல்லும் என முதலீட்டு துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தை பொறுத்தவரை 3 லட்சம் ரூபாய் வரை வெள்ளி விலை செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார். ஆனால் கடந்த ஆண்டை போல அபரிபிதமான வளர்ச்சி இந்த ஆண்டு இருக்காது என்றே கணிக்கிறார். நீண்டகால அடிப்படையில் வெள்ளிக்கான தேவை இருக்கிறது தொழில்துறை ரீதியான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே நீண்ட கால நோக்கி வெள்ளியில் முதலீடு செய்யலாம், விலை குறையும் போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என அறிவுரை வழங்குகிறார். முழு பணத்தையும் தங்கம், வெள்ளியில் போடக் கூடாது பணத்தை பிரிந்த்து தங்கம், வெள்ளி , ஈக்விட்டி என முதலீடு செய்ய பரிந்துரை செய்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications