தங்கத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்த முதலீட்டாளர்களை, தனது அதிரடி சரிவால் அதிர வைத்திருக்கிறது வெள்ளி. கடந்த மார்ச் மாதம் வெள்ளி சந்தைக்கு ஒரு கருப்பு மாதமாகவே அமைந்துவிட்டது. சுமார் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான மாதாந்திர வீழ்ச்சியை சந்தித்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பதம் பார்த்துள்ளது. 90 டாலர்களை நோக்கி பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெள்ளி, இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது ஏன்?
பணவீக்க கவலைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வங்கிகளின் வட்டி விகித கொள்கைகள் என அனைத்தும் சேர்ந்து வெள்ளியின் விலையை அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளன. ஆனால், இந்த சரிவு ஒரு முடிவு அல்ல, இது ஒரு மறுதொடக்கம் என்கிறார்கள் சில சந்தை வல்லுநர்கள்.

ஏனெனில் விலை இவ்வளவு குறைந்திருக்கிறது, இதுதான் குறைந்த விலையில் வாங்குவதற்கு சரியான நேரமா அல்லது இன்னும் குறையும் வரை காத்திருக்க வேண்டுமா? வெள்ளி சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும். மோசமான சரிவுக்குப் பிறகு மீண்டு வந்து புதிய உச்சத்தை தொடுமா? உலகளாவிய நிபுணர்களின் கணிப்புகளையும், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களையும் பார்ப்போம்.
வெள்ளி விலையானது இந்திய பியூச்சர் சந்தையில் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து வலுவான டாலர் மதிப்பு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணிகள் மத்தியில் 45% சரிவில் காணப்படுகிறது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மத்தியில் பணவீக்கம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இது வட்டி விகிதங்களை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் வெள்ளியின் விலையானது சரியத் தொடங்கியுள்ளது.
கடந்த 29 ஜனவரி 2026ல் பியூச்சர் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 4,20,088 ரூபாயை எட்டியது. தற்போது அந்த விலையில் இருந்து பார்க்கும்போது 45% சரிவில் காணப்படுகிறது. டாலர் குறியீடானது 100-க்கு அருகில் காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 3% வலிமை அடைந்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்த நிலையில், டாலருக்கான தேவையானது சர்வதேச அளவில் அதிகரித்தது. இது வட்டியில்லா முதலீடுகளான தங்கம் மற்றும் வெள்ளி விலையானது குறைய வழிவகுத்தது.
இது வாங்க சரியான நேரமா?
வெள்ளி விலையானது 45% சரிவில் காணப்படும் சூழலில், இது வாங்க சரியான நேரமா என முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறும் போது குறுகிய காலத்தில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம். வெள்ளியின் போக்கு மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்கள் சந்தையில் போக்கை தொடர்ந்து தீர்மானிக்கும். தங்கம் மற்றும் வெள்ளி விலையை தீர்மானிப்பதில் பல பொதுவான காரணிகள் இருந்தாலும், வெள்ளியின் தனித்துவமான குணம் அதை ரிஸ்க் மிகுந்த ஒன்றாகவும் மாற்றுகிறது. பொதுவான பல காரணிகள் விலை ஏற்றத்தை ஊக்குவித்தாலும், அதன் தொழில் முறை தேவையானது, அதன் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக முதலீட்டாளர்கள் மிகவும் உன்னிப்பாக கவனத்தில் வெள்ளி முதலீடு குறித்து திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications