தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?

தங்கம் விலை தான் விண்ணை தொடுதுன்னா, வெள்ளி விலையும் இப்போ விண்வெளியை தொடுது - இதுதான் இப்போதைய மார்க்கெட் டிரெண்ட். இத்தனை காலம் தங்கத்தின் நிழலில் மறைந்திருந்த வெள்ளி, இப்போது உலக நாடுகளின் பார்வையில் மூலோபாய ஆயுதமாக மாறியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த உலகளாவிய வெள்ளி சந்தை மாற்றத்தின் மையப்புள்ளியாக நமது இந்தியா விஸ்வரூபம் எடுத்துள்ளது தான்.

2026-ல் வெள்ளி விலை ஒரு கிலோ 2.5 லட்சம் வரை எட்டியுள்ள நிலையில், வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்பட்ட வெள்ளி, இன்று சோலார் பேனல்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிப் தயாரிப்பில் தவிர்க்க முடியாத சக்தி ஆகிவிட்டது. உலகமே வெள்ளி தட்டுப்பாட்டில் தவிக்கும் போது, இந்தியாவின் அசுரத்தனமான இறக்குமதியும் தேவையும், சர்வதேச சந்தையை அதிர வைத்துள்ளது. வெள்ளிக்கு ஏன் திடீரென இவ்வளவு டிமாண்ட்? தங்கம் வாங்குவதை விட வெள்ளியில் முதலீடு செய்வது லாபமா? இந்தியாவின் கை ஓங்குவது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?

இத்தனை காலமும் தங்கத்தின் நிழலிலேயே பயணித்து கொண்டிருந்த வெள்ளி, இப்போது தனது பாதையை மாற்றி கொண்டுள்ளது. 2026-ம் ஆண்டில் நாம் பார்ப்பது வெறும் விலை உயர்வை மட்டுமல்ல, வெள்ளி சந்தையின் ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் ஏற்பட்டுள்ள ஒரு மாபெரும் மாற்றத்தை தான்.

முன்பெல்லாம் வெள்ளியை ஆபரணமாகவோ அல்லது தங்கத்திற்கு சிறிய மாற்றாகவோ தான் பார்த்தோம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சோலார் பேனல்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்சார வாகனங்கள் என நவீன உலகின் அச்சாணியாக வெள்ளி மாறிவிட்டது. அதன் அபரிமிதமான மின் கடத்தும் திறன் காரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகள் வெள்ளியை மிக முக்கியமான கனிமங்கள் பட்டியலில் சேர்த்துள்ளன.

Also Read

தங்கத்தைப் போலவே பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பைத் தரும் வெள்ளி, அதே சமயம் தொழில்துறை வளர்ச்சியை பொறுத்து லாபம் தரும் ஒரு சொத்தாகவும் உருவெடுத்துள்ளது. இத்தகைய வெள்ளி குறித்து வேர்ல்ட் சில்வர் சர்வே (World Silver Survey) ஆய்வை நடத்தியுள்ளது. அதன் தரவுகளின் படி, கடந்த சில ஆண்டுகளாகவே வெள்ளியின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. உலகில் வெள்ளி நேரடியாக சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுக்கப்படுவது மிக குறைவு. பெரும்பாலான வெள்ளி, ஈயம், துத்தநாகம், செம்பு மற்றும் தங்க சுரங்கங்களின் துணை தயாரிப்பாகவே கிடைக்கிறது. இதனால் வெள்ளி விலை உயர்ந்தாலும் அதன் உற்பத்தியை உடனடியாக பெருக்கி விட முடியாது. இந்த விநியோக தட்டுப்பாடுதான் வெள்ளி விலையை ஏறுமுகத்திலேயே வைத்திருக்கிறது.

இந்த உலகளாவிய மாற்றத்தின் மையப்புள்ளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதற்கு பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் நகையாக பார்க்கப்பட்டால், வெள்ளி விவசாயிகளின் நெருங்கிய நண்பனாக கருதப்படுகிறது. இந்தியாவின் பிஎல்ஐ (PLI) திட்டங்கள் மூலம் சோலார் மற்றும் டெலிகாம் உள்கட்டமைப்புகள் பெருகி வருகின்றன. இதனால் தொழில்துறை வெள்ளிக்கான தேவை இந்தியாவில் எகிறியுள்ளது. இந்தியா வெறும் நுகர்வோர் மட்டுமல்ல, உற்பத்தியிலும் கெத்து காட்டுகிறது. ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவனங்கள் தங்களது நவீன சுரங்கங்கள் மூலம் இந்தியாவின் வெள்ளி உற்பத்தியை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளன.

Recommended For You

வெள்ளி இனி இரண்டாம் பட்ச உலோகம் அல்ல. இது டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை எரிசக்தி புரட்சியின் எரிபொருள். கலாச்சார ரீதியாகவும், தொழில்துறை ரீதியாகவும் வெள்ளிக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிணைப்பு, வரும் காலங்களில் உலக வெள்ளி சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியாவை மாற்ற போகிறது என்பது மட்டும் உறுதி..

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+