தங்கத்தை தொடர்ந்து சமீபத்திய காலமாக வெள்ளி விலையும் இப்போது சாமானியர்களின் கைக்கு எட்டாத உயரத்திற்கு சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் டிரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அதிரடி மாற்றங்கள் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மத்தியில், வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் 6%-க்கு மேல் உயர்ந்து, கிலோ 2,68,120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி திரும்புவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் விலை ஏறுமா? அல்லது இது லாபம் ஈட்டுவதற்கான நேரமா?' என சந்தையில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. டிரம்ப்பின் அடுத்தடுத்த நகர்வுகள், வெள்ளி விலையை எங்கே கொண்டு செல்லும்? சாமானியர்கள் இந்த விலையில் முதலீடு செய்யலாமா? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் முக்கிய பங்கு வகிக்கும் டாலர் மதிப்பானது சற்று வலுவிழந்து காணப்படுகிறது. இது நிச்சயமற்ற நிலையில் காணப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் மத்தியில் காணப்படுகிறது. மேலும் அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்சனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த நாட்டுக்கு எவ்வளவு வரி விதிப்பாரோ, இன்று என்ன அறிவிப்பு வருமோ என்ற அச்சமானது, டொனால்ட் டிரம்ப் குறித்து நிலவி வந்தது. ஆனால் தற்போது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டிரம்ப் விதித்த சிலவரிகளை அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், நாட்டுக்காக சரியான முடிவெடுக்க தைரியம் காட்டாத சில நீதிபதிகள் குறித்து நான் வெட்கப்படுகின்றேன் என டிரம்ப் கடுமையான குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றி வந்த நாடுகள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளன. ஆனால் இது தற்காலிகம் தான். நீண்ட நாட்கள் நீடிக்காது.
மேலும் உச்ச நீதிமன்றம் அனைத்து வரிகளையும் ரத்து செய்யவில்லை. சர்வதேச நெருக்கடி பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட வரி முறையையே ரத்து செய்துள்ளனர். அடிப்படையில் இது கட்டணம் பெற பயன்படுகிறது. இந்த சட்டத்தை நான் வேறு பல பல வழிகளில் பயன்படுத்த முடியும் என்று எச்சரித்துள்ளார். இது பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே வெள்ளி விலையானது இன்று 6.3% அதிகரித்து, 2,68,875 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையில் 2% மேல் ஏற்றத்தில் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளியின் விலையானது 3% மேல் அதிகரித்து, 87.10 டாலராக காணப்படுகிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு மத்தியில், சர்வதேச வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என்ற நம்பிக்கையானது துளிர் விட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க டாலர் மதிப்பானது சற்று வலுவிழந்து காணப்படுகிறது. இருப்பினும் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றம், குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கலாம். மேலும் வாஷிங்டன் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில் தாமதம் செய்யப்போவதாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வர்த்தக தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்திய அதிகாரிகளும் தங்கள் திட்டமிடப்பட்ட அமெரிக்க பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. ஜப்பானும் தற்போதைய சூழலில் ஒரு பெரிய குழப்பம் என்று விவரித்துள்ளது. இதனிடையே ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியானது 4வது காலாண்டில் 1.4% ஆக குறைந்துள்ளது. இது முன்னதாக 4.4% அளவில் இருந்தது. மொத்தமாகப் பார்க்கும்போது இந்த ஆண்டில் வெறும் 2.2% வளர்ச்சி கண்டுள்ளதாக BEA தரவுகள் காட்டுகின்றன.
மொத்தத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்த நிலையும், ஈரானுடனான அரசியல் நிச்சயமற்ற தன்மையும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். ஆக நீண்ட கால அடிப்படையில் விலை உயர்ந்த உலோகங்கள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், விலை குறைந்தால் படிப்படியாக சரியான ஆலோசனையுடன் வாங்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தடாலடி சரிவு.. தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா..?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?



Click it and Unblock the Notifications