மீஷோ லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விடித் ஆத்ரே, இந்திய பில்லினியர்கள் பட்டியலில் இணைந்தார். மீஷோ பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதை அடுத்து பங்கு மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது. இதனால் விடித் ஆத்ரேவின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
மீஷோ ஐபிஓ வெளியிடப்பட்டு பங்கு பட்டியலிடபட்டது முதல் அதன் மதிப்பு 74%க்கும் அதிகமான லாபத்தை ஈட்டி, விடித் ஆத்ரேவின் சொத்து மதிப்பை அதிகரித்து பில்லினியர்கள் பட்டியலில் இணைய செய்துள்ளது. ஐஐடி டெல்லியில் மின் பொறியியல் படித்த ஆத்ரே, மீஷோவின் ஒரு பங்கு விலை ரூ 193.50ஐ கடந்ததால் இந்த மைல்கல்லை எட்டினார்.

இது பட்டியலிடப்பட்ட நாளின் உச்ச விலையான ரூ177.50ஐயும், பட்டியலிடல் விலையான ரூ161.20ஐயும் தாண்டி உயர்ந்தது. நிறுவனத்தின் ஐபிஓ விலையான ரு 111 உடன் ஒப்பிடுகையில், பங்குகள் 74.3% உயர்ந்து, சந்தையில் நிறுவனத்தின் அதிரடி அறிமுகத்தை உறுதிப்படுத்தின. பங்குகளின் இந்த திடீர் உயர்வு ஆத்ரேவை பில்லியனர் வரிசையில் சேர்த்துள்ளது. 11.1% பங்குகளைக் கொண்ட அவர், மொத்தம் 47.25 கோடி பங்குகளை வைத்துள்ளார்.
இதன் மூலம் அவரது நிகர மதிப்பு ரூ9,142.87 கோடியாக - அதாவது சுமார் $1.005 பில்லியனாக - அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான சஞ்சீவ் பர்ன்வால், 31.6 கோடி பங்குகளுடன் ரூ6,114.6 கோடி மதிப்புள்ள பங்குகளைக் கொண்டிருக்கிறார்.
மீஷோ தனது பங்குகளை கடந்த டிசம்பர் 10 அன்று சந்தையில் பட்டியலிட்டது. ஐபிஓ விலையை விட அதிக விலையில் தொடங்கிய பங்குகள், முதல் நாள் வர்த்தகத்தை ஐபிஓ விலையான ரூ111 ஐ விட 53% அதிகமாக முடித்தன. இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு, பங்குகள் திங்களன்று 3%க்கு மேல் உயர்வை பதிவு செய்தன. பரந்த சந்தைகள் அழுத்தத்தில் இருந்தபோதிலும், செவ்வாயன்று இந்த ஏற்றம் மேலும் தொடர்ந்தது.
மீஷோவின் இந்த எழுச்சிக்கு அதன் முதல் நிறுவன மதிப்பீடு ஒரு முக்கிய காரணமாகும். சமீபத்தில், 'சாய்ஸ் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்' நிறுவனம் மீஷோவுக்கு 'வாங்க' (Buy) என்ற மதிப்பீட்டை வழங்கி, ரூ 200 என்ற இலக்கு விலையையும் நிர்ணயித்தது. இது முதலீட்டாளர்களிடையே நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
சாய்ஸ் ப்ரோக்கிங், "லாபத்தை நோக்கிய வேகமான பாதை"யை நிறுவனத்தின் முக்கிய நேர்மறை காரணியாகக் குறிப்பிட்டது. FY28E ஆம் ஆண்டுக்கான வருவாய் மதிப்பீட்டில் மீஷோவை 4x EV/வருவாய் அளவில் மதிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீடு மூன்று கட்ட தள்ளுபடி பணப்புழக்க மாதிரி (DCF model) மற்றும் சக நிறுவனங்களின் செயல்திறனை ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
FY25 முதல் FY28 வரையிலான காலகட்டத்தில் மீஷோ 31% வருவாய் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) அடையும் என்று தரகு நிறுவனம் கணித்துள்ளது. "ஆழமான மதிப்பு சார்ந்த இ-காமர்ஸ் ஊடுருவல் மற்றும் தளவாடத் திறன்கள்" இந்த வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என அது கூறியது. டியர்-2 மற்றும் டியர்-3 பயனர்களை மையமாகக் கொண்ட அதன் ஜீரோ-கமிஷன், குறைந்த சராசரி ஆர்டர் மதிப்பு கொண்ட தளம் தனித்துவமானது.
பயனர் வளர்ச்சி மற்றும் இயக்க அளவில் மீஷோவுக்கு ஒரு போட்டித்தன்மை வாய்ந்த விளிம்பு இருப்பதாகவும் தரகு நிறுவனம் சுட்டிக்காட்டியது. நிறுவனத்தின் EBITDA FY27E ஆம் ஆண்டுக்குள் நேர்மறையாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மீஷோ FY28E EV/வருவாய்க்கு 2.4x அளவில் வர்த்தகம் செய்கிறது. இது சக நிறுவனங்களின் சராசரியான 5.4x உடன் ஒப்பிடும்போது, "அடிப்படை வலுப்பெறும்போது மறுமதிப்பீட்டிற்கான இடத்தைக் கொண்டுள்ளது" என்று அறிக்கை குறிப்பிட்டது.
அதே சமயம், செயலாக்க அபாயங்களையும் சாய்ஸ் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆர்டர்களில் 77% க்கும் மேற்பட்டவை 'பணம் செலுத்தி பொருட்களைப் பெறுதல்' (Cash-on-delivery) முறையைச் சார்ந்திருப்பது மற்றும் தளவாடப் பிளவுகள் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்தியாவின் குறைந்த ஊடுருவல் கொண்ட ஆன்லைன் சில்லறை சந்தையில் மீஷோ ஒரு முக்கிய மதிப்பு சார்ந்த இ-காமர்ஸ் நிறுவனமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ரூ 5,000 கோடிக்கும் அதிகமான மீஷோவின் மூன்று நாள் ஐபிஓ, நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவரிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக 79 மடங்கு சந்தா பெறப்பட்டது. சில்லறை முதலீட்டாளர்களுக்கான பகுதி 19 மடங்குக்கு மேல் சந்தா பெறப்பட்டது. தகுதி வாய்ந்த நிறுவன வாங்குவோருக்கான ஒதுக்கீடு 120 மடங்கு சந்தா பெறப்பட்டு, பட்டியலிடப்பட்ட பின்னர் ஏற்பட்ட இந்த ஏற்றத்திற்கும், புதிய பில்லியனரை உருவாக்குவதற்கும் வழி வகுத்தது.
மீஷோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விடித் ஆத்ரே, 2008 முதல் 2012 வரை டெல்லி ஐஐடியில் மின் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். பட்டப்படிப்புக்குப் பிறகு, அவர் தனது தொழில் வாழ்க்கையை 2012 ஜூன் முதல் 2014 மே வரை சென்னையில் ஐடிசி லிமிடெட்டில் செயல்பாட்டுப் பிரிவில் தொடங்கினார்.
பின்னர், 2014 ஜூன் முதல் 2015 ஜூன் வரை பெங்களூரில் இன்மொபியில் வியூகப் பிரிவில் பணியாற்றினார். அவர் 2015 ஜூன் முதல் மீஷோவுக்கு தலைமை நிர்வாக அதிகாரியாக தலைமை தாங்கி வருகிறார். ஆத்ரே, ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 (ஆசியா & இந்தியா, 2018) மற்றும் ஃபார்ச்சூன் 40 அண்டர் 40 (2021) உட்பட பல இளம் தலைமைப் பதவிப் பட்டியில் இடம்பெற்று தனது நிர்வாகத் திறனை நிரூபித்துள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications