சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தின் ஊழியர் டாய்லெட் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா எழுதி கொடுத்து நிறுவனத்தையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் இயக்குனராக செயல்படும் ஏஞ்சலா யோஹ் இந்த பதிவினை தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அப்போது தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு ஊழியர் தன்னுடைய வேலையை திடீரென ராஜினாமா செய்ததாகவும். ஏன் ராஜினாமா செய்கிறீர்கள் என்று என கேட்டதற்கு அவர் கூறிய வார்த்தைகள் இதுதான் என்றும் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள் , உடனடியாக தூக்கி எறிந்து விடுகிறார்கள் என அவர் பதில் அளித்தாராம். இதனை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தையும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் டாய்லெட் பேப்பரில் ராஜினாமா எழுதப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை நினைவூட்டவே இப்படி ஒரு இப்படி ஒரு காகிதத்தில் நான் ராஜினாமாவை எழுதி தருகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை லிங்குடினில் பகிர்ந்திருக்கும் அந்த பெண், "இந்தக் குறிப்பு வெறும் வலியை ஏற்படுத்தவில்லை, பணியிட கலாச்சாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை எனக்கு புரிய வைத்திருக்கிறது" என கூறியுள்ளார்.
நிறுவனங்கள் ஊழியர்களை மரியாதையாக நடத்த வேண்டும், ஊழியர்களை சின்ன விஷயங்களுக்கு பாராட்டுவதால்கூட, வேலையில் பல மாற்றங்கள் நடக்கும் என கூறியுள்ளார். ஒருவேளை ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும், மனக்கசப்புடன் அல்ல, நன்றியுணர்வுடன் வெளியேறுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராட்டு என்பது தக்கவைப்புக்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பு. சிந்திக்க வேண்டிய நேரம் இது, பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்றே தொடங்குங்கள், என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
அந்த ஊழியர் நிஜமாகவே இப்படி ஒரு பேப்பரில் எழுதி வைத்து வேலையை ராஜினாமா செய்தாரா அல்லது தன்னுடைய பதிவு தொடர்புடையதான ஒரு புகைப்படத்தை அவர் பதிவு செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்த பலரும் பின்னூட்டங்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர் இந்த ஊழியரின் முடிவை நான் மதிக்கிறேன், சில நாட்களுக்கு முன்னர் நானும் இதே போல தான் என்னுடைய முந்தைய வேலையை ராஜினாமா செய்தேன் என கூறியுள்ளார். ஒரு பயனர் சில சமயங்களில் ஊழியர்கள் நிறுவனத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டு வேலையை விட்டு நிற்பது கிடையாது நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் இடையே மேலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் நபர் மீது ஏற்படும் அதிருப்தி தான் அவர்கள் வேலையை விடுவதற்கு காரணம் என பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications