ஆசியாவில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியிலான போர் பதற்றம் அதிகரித்து வருகிறதோ, இதற்கு இணையாக பாகிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் மத்தியிலான தாக்குதல்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த வாரம் வரையில் எல்லை பகுதியில் மட்டுமே நடந்து வந்த தாக்குதல் தற்போத தலைநகர் வரை சென்றுள்ளது.
ஆஃப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 400 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 250 பேர் காயமடைந்ததாகவும் தாலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஆஃப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தற்போது தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என்பதால், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் இரவு நேரத்தில் நடைபெற்றதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
ஆஃப்கானிஸ்தான் அரசின் துணைப் செய்தித்தொடர்பாளர் Hamdullah Fitrat இந்தச் சம்பவம் குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டார். உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் விமானத் தாக்குதல் நடந்தியது. இதில் 2000 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையின் பெரும் பகுதிகள் ஏவுகணை தாக்குதல் மூலம் இடிந்து போனதாக அவர் கூறினார்.

இங்கு போதைப் பொருள் பயன்பாட்டை விட்டுவிட்டு புதிய வாழ்க்கை தொடங்க உதவும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இது அப்பாவி மக்கள் நிறைந்த இடம் என்பதால், இந்தச் சம்பவம் ஆஃப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அரசின் மூத்த செய்தித்தொடர்பாளரான Zabihullah Mujahid இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவருதாக குற்றம் சாட்டினார்.
இது மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் Zabihullah Mujahid வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் ஆஃப்கானிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைந்து நடைபெற்றதால், இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது.

பாகிஸ்தான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் தரப்பின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், காபூலில் எந்த மருத்துவமனையும் தாக்கப்படவில்லை என்றும் பாகிஸ்தான் தெளிவாக அறிவித்துள்ளது. இந்த மறுப்பு இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பு தங்களது நடவடிக்கை ராணுவ ரீதியானது மட்டுமே என்று வலியுறுத்துகிறது.
பாகிஸ்தான் தகவல் அமைச்சர் Attaullah Tarar தனது எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கம் அளித்தார். பாகிஸ்தான் ராணுவம் காபூல் மற்றும் கிழக்கு மாகாணமான நங்கார்ஹாரில் உள்ள ராணுவ தளத்தை மட்டும் குறிவைத்து துல்லியமான விமான படை கொண்டு தாக்குதல்களை நடத்தியதாக அவர் கூறினார்.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications