வல்லரசு நாடுகளில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் டிஜிட்டல் பணமான பிட்காயின் மதிப்பு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் பிட்காயின் சந்தையின் மதிப்பு 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சுமார் 4,251 டாலராக உயர்ந்துள்ளது.
அதிரடி வளர்ச்சி
சர்வதேச பங்குச்சந்தை பல விதிமானப் பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும்போது பிட்காயின் மதிப்பு 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 320 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது. இது உலகின் எந்தக் கிரிப்டோகரன்சியும் அடைந்திடாத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான்
பிட்காயின் ஜப்பான் நாட்டில் பணமாகப் பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள நிலையில், பிட்காயின்-இல் முதலீடு செய்யப்பட்ட 42 சதவீத தொகை ஜப்பான் யென்.
ஜப்பானில் பல முன்னணி கடைகள் பிட்காயினை எவ்விதமான தடையுமில்லாமல் பெறுகிறது.
முக்கியக் காரணம்
பிட்காயின் வளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படை காரணம் , இந்நிறுவனம் வர்த்தகம் செய்யும் அளவீட்டை அதிகரித்துள்ள காரணத்தாலும், உலக நாடுகள் முழுவதிலும் இதன் தொழில்நுட்பங்கள் விரிவடைந்துள்ள காரணத்தால் கடந்த 7 மாதத்தில் மட்டும் சுமார் 320 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
பாதுகாப்பு
அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் நிலவும் இப்பிரச்சனையால், முதலீட்டாளர்கள் பிட்காயினைப் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.
இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பு
மே 22, 2010 ஆண்டுப் பிட்காயின் மதிப்பு வெறும் 0.003 சென்ட்கள் மட்டுமே இன்று இதன் மதிப்பு 4,115 டாலர்.
ஆக, 2010ஆம் ஆண்டுப் பிட்காயினில் வெறும் 1 டாலர் முதலீடு செய்திருந்தால் இப்போது அதன் விலை 1.4 மில்லியன் டாலர்.
64 ரூபாய் முதலீட்டுக்கு 898.1 கோடி ரூபாய் வருமானம்.
'வெற்றி' நிச்சயம்
விசிடிங் கார்டு
சதீஷ் குமார்


Click it and Unblock the Notifications