அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் டெக் சீஇஓ 'இவர்'தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    அமெரிக்க டெக் உலகில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரி யார் என்று தெரியுமா?

    இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் 'தி டைமிஸ்' பத்திரிக்கையின் ஆண்டு சர்வேயின் படி அமெரிக்காவில் அதிகம் சம்பளம் பெறும் 200 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 பேர் யார் தெரியுமா..?

    கூகுள், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரிகள் அதிகம் பெறுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இதில் உள்ள ஆச்சர்யங்கள் பார்ப்போம் வாருங்கள்.

    சத்ய நாடெல்லா, மைக்ரோசாப்ட்

    முதல் இடத்தில் உள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாடெல்லா.

    இந்தியாவில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள தலைமை செயல் அதிகாரிகளில் நான்காவது இடத்திலும் டெக் சிஈஓ வில் முதல் இடத்திலும் உள்ளார்.

    இவரது அடிப்படை சம்பளம் 918,917 டாலர்கள், 3,600,000 டாலர்கள் போனஸ், 12,729 டாலர்கள் ஊக்கத்தொகையாகப் பெறுகிறார். வருடத்திற்கு 84,308,755 டாலர்களை ஊதியமாகப் பெறுகிறார்.

     

    நிக்கோலஸ் டி வூட்மேன், கோப்ரோ

    அமெரிக்க தலைமை செயல் அதிகாரிகளில் 15 வது இடத்திலும் டெக் நிறுவனங்களில் இரண்டாம் இடத்திலும் உள்ளார் கோப்ரோ நிறுவனத்தின் தலிமை செயல் அதிகாரி நிக்கோலஸ் டி வூட்மேன். இவரை அனைவரும் நிக் வூட்மேன் என்றே அழைப்பார்கள்.

    இவரது அடிப்படை சம்பளம் 800,000 டாலர்கள், 31,893,600 டாலர்கள் போனஸ், 47,525 டாலர்கள் ஊக்கத்தொகையாகவும் வருடத்திற்கு 77,427,175 டாலர்கள் ஊதியமாகப் பெறுகிறார்.

     

    லாரன்ஸ் ஜே எலிசன், ஆரக்கிள்

    அரக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரன்ஸ் ஜே எலிசன் வருடத்திற்கு 67,261,251 டாலர்கள் ஊதியமாகப் பெறுகிறார்.

    அதில் அடிப்படை சம்பளம் 1 டாலரும், போனஸாக 741,384 டாலர்களும் ஊக்கத்தொகையாக 1,540, 266 டாலர்களும் பெறுகிறார்.

     

    ஸ்டீவன் எம் மொல்லென்காப், குவால்காம்

    குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவன் எம் மொல்லென்காப் நான்காவது இடத்திலும், வருடாந்திர சம்பளமாக 60,740,592 டாலரும் அடிப்படை சம்பளமாக 1,069,239 டாலர்களும் பெறுகிறார்.

    அதுமட்டும் இல்லாமல் போனசாக 1,550,000 டாலரும் ஊக்கத்தொகையாக 121,150 டாலரும் பெறுகிறார்.

     

    மரிசா மேயர், யாஹூ

    யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் இந்த பட்டியலில் உள்ள முதல் பெண் தலைமை செயல் அதிகாரி ஆவர்.

    இவர் வருடாந்திர சம்பளமாக 42,083,508 டாலர் பெறுகிறார், அதில் 1,000,000 டாலர் அடிப்படை சம்பளமாகவும், 11,08,800 டாலர் போனசாகவும், 28,065 டாலர் ஊக்கத்தொகையாகவும் பெறுகிறார்.

     

    சுந்தர் பிச்சை, கூகுள்

    இந்தியாவை சேர்ந்த சுந்த பிச்சை 50 மில்லியன் டாலர் சம்பளத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதில் இவரது 142 மில்லியன் கூகுள் பங்குகளும் அடங்கும்.

    மார்க் பெனியாஃப், சேல்ஸ்ஃபோர்ஸ்

    சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் வருடாந்திர சம்பளமாக 39,907,534 டாலரும், அதில் அடிப்படை சம்பளம் 1,440,000 டாலரும், போனஸ் 2,816,640 டாலரும், ஊக்கத்தொகை 1,291,541 டாலரும் அடக்கம்.

    சக்கரி நெல்சன், நெட்சூட்

    கிளவுட் மெபொருள் தயாரிக்கும் நிறுவனமான நெட்சூட்டின் தலைமை செயல் அதிகாரியான சக்கரி நெல்சன் ஆண்டு சம்பளமாக 31,640,991 டாலருடன் 7 வது இடத்தில் உள்ளார்.

    இவரின் அடிப்படை சம்பளம் 500,000 டாலரும், போனஸ் 530,782 டாலரும், ஊக்கத்தொகை 8,908 டாலரும் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    பிரையன் எல் ராபர்ட்ஸ், காம்காஸ்ட்

    கேபிள், இண்டர்னெட் மற்றும் ஃபோன் நிறுவனமான காம்காஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் எல் ராபர்ட்ஸ் 26,465,565 டாலர் சம்பளத்துடன் 8 வது இடத்தில் உள்ளார்.

    மைக்கேல் ஜே செய்லர், மைக்ரோஸ்டேடர்ஜி

    வணிக நுண்ணறிவு மற்றும் கிளவுட் நிறுவனமான மைக்ரோஸ்டேடர்ஜி நிறுவனத்தின் தலைவருமான மைக்கேல் ஜே செய்லர் 9 வது இடத்திலும், ஆண்டு சம்பளமாக 24,101,665 டாலரும் பெறுகிறார்.

    மார்கரெட் சி விட்மன், எச்பி

    எச்பி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்கரெட் சி விட்மன் 19,612,164 டாலர் ஆண்டு சம்பளத்துடன் 10வது இடத்தில் உள்ளார்.

    ஆச்சிரியம்

    உலகை ஆச்சிரியத்தில் மூழ்கடித்த சில முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள்..!

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    10 highest paid tech CEOs in the US

    The Times 10 highest paid tech CEOs in the US
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more