டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 10 மில்லியன் டாலர் பரிசு.. ஈரான் IRI அமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு!

ஈரான் மீது அமெரிக்கா கடந்த 6 நாட்களாக பெரும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதில் அதிகப்படியான பாதிப்பு ஈரானுக்கு தான்.

ஏற்கனவே டிரம்ப்-ஐ கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் உட்பட பல அமைப்புகள் அமெரிக்க உளவுத்துறைக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்த நிலையில், தற்போது வெளிப்படையாக ஈரான் நாட்டின் ஒரு போராளி குழு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 10 மில்லியன் டாலர் பரிசு.. ஈரான் IRI அமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு!

ஈரான் நாட்டின் ஆதரவு கொண்ட போராளிக் குழுக்களின் அமைப்பான இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் (Islamic Resistance in Iraq - IRI) டிரம்ப் தலைக்கு 10 மில்லியன் டாலர் தொகையை பரிசாக அறிவித்துள்ளது.

அதாவது டிரம்ப்-ஐ கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் தொகை பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது 2020-ல் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் அமெரிக்க தனது ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதிற்கு பழிவாங்கும் விதிமாக அறிவித்துள்ளது.

IRI அமைப்பு இந்த தொகையை அதன் உறுப்பினர்கள், அதாரவாளர்களிடம் நிதி திரட்டியது மூலம் கொடுப்பதாக ஈரான் நாட்டின் பிரஸ் டிவி வாயிலாக அறிவித்துள்ளது.

மேலும் இதுக்குறித்து IRI அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநபர், குழுக்கள், அமைப்புகள் என யார் டிரம்ப்-ஐ கொன்றாலும் இப்பரிசு தொகை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டிரம்ப் ஈரான் நாட்டின் பிரதமர் Ali Al-Zaidi சந்தித்து பேசிய போது 2020ல் அமெரிக்க நடத்திய டிரோன் தாக்குதல் காசெம் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரை கொன்றது குறித்து பெருமையாக பேசினார். இதை தொடர்ந்து தான் IRI அமைப்பு 10 மில்லியன் டாலர் பரிசு தொகையை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+