வல்லரசுக்கே இப்படி ஒரு நிலையா.. வேலையின்மை சலுகை கோரி 3 வாரத்தில் 16.8 மில்லியன் பேர் விண்ணப்பம்..!

நியூயார்க்: உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா தான், இன்று உலகிலேயே கொரோனா கலவரத்திலும் முதலாவதாக திகழ்கிறது. இன்றைய தேதியில் அங்கு 4,68,895 பேருக்கு மேல் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 16,697 ஆக அதிகரித்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா சுற்றி சுற்றி அடி வாங்கி வருகிறது எனலாம். ஒரு புறம் கொரோனாவினால் சீர்குலைந்து போயுள்ள அமெரிக்கா, பொருளாதார ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பல லட்சம் பேர் தொடர்ந்து தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். ஏனெனில் அத்தியாவசியம் தவிர அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பல லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

வேலை இழப்பு

வேலை இழப்பு

இதற்கிடையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 16.8 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பம் செய்துள்ளனராம், கடந்த வாரம் 6.6 மில்லியன் பேர் வேலையின்மை நலனுக்காக விண்ணபித்த நிலையில், இந்த வாரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இப்படி ஒரு நிலையா?

இப்படி ஒரு நிலையா?

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் 10ல் ஒரு ஊழியர்கள் தங்களது வேலையினை இழந்து வருகின்றனராம். இது மட்டும் அல்ல கடந்த வியாழக்கிழமை வாராந்திர வேலையின்மை உரிமைக்கோரல் அறிக்கை, பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்த தெளிவாக எடுத்துக் காட்டும் மிகச் சரியான ஒரு தரவு என்றும் கூறப்படுகிறது.

வேலை இழப்பு அதிகரிப்பு

வேலை இழப்பு அதிகரிப்பு

மேலும் ஏப்ரல் மாதத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகள் குறித்த பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளையும், பொருளாதாரம் ஆழ்ந்த மந்த நிலையில் உள்ளது என்ற அவர்களின் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது. இலவச வீழ்ச்சியைத் தடுக்க அதிக நிதி தூண்டுதலின் அவசரத் தேவையையும் இது அடிக் கோடிட்டுக் காட்டுகிறது, என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸிலும் இதே நிலை தான்

பிரான்ஸிலும் இதே நிலை தான்

அமெரிக்காவில் தான் இப்படி எனில் பிரான்ஸிலும் இதே நிலை தான். சொல்லப்போனால் பிரிட்டீஸ் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் மருத்துவமணையில் தீவிர சிசிச்சை பிரிவில் இருந்து, தற்போது சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது நாடு இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இப்படி ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் எடுத்து வரும் பிரச்சனை

விஸ்வரூபம் எடுத்து வரும் பிரச்சனை

vஇப்படி ஒரு நிலையில் அமெரிக்காவில் மட்டும் அல்ல ஐரோப்பிய நாடுகளிலும் வேலையின்மை பிரச்சனை தலைவிரித்தாடி வருகின்றது. மேலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் வேலையின்மை காப்பீட்டு கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களும் அதிகரிக்கும். இது மில்லியன் கணக்கான புதிதாக வேலையில்லாத நிலையை உருவாக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேலையின்மை அதிகரிக்கும்

வேலையின்மை அதிகரிக்கும்

மேலும் அமெரிக்காவில் 95% அதிகமான அமெரிக்கர்கள் இப்போது வீட்டில் தங்கி உள்ளனர். அல்லது தங்குமிடம் இடத்தில் உத்தரவுகளின் கீழ் இருப்பதால், கடந்த வாரம் உரிமைகோரல்களில் மிதமான தன்மை தற்காலிகமானது தான். ஆனால் இனி வரும் காலங்களில் அது அதிகரிக்கும் என்றும் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

ஊக்குவிப்பு நடவடிக்கை

ஊக்குவிப்பு நடவடிக்கை

கடந்த வியாழக்கிழமையன்று பெடரல் ரிசர்வ் வங்கி 2.3 டிரில்லியன் டாலர் நிதியினை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களையும் மேம்படுத்துவதற்கான அறிவித்துள்ளது. அதோடு மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்க மத்திய வங்கி பொருளாதாரம் முழுமையாக மீளத் தொடங்கும் வரை, அனைத்து கருவிகளையும் அதன் வசம் தொடர்ந்து பயன்படுத்தும் என்று கூறினார்.

கூடுதல் நடவடிக்கை

கூடுதல் நடவடிக்கை

பொருளாதாரத்திற்கு உதவ கூடுதல் நிதி தூண்டுதல் தேவை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். சமீபத்திய தொகுப்பு வேலையின்மை சலுகைகளை மேம்படுத்துவதால், வணிகங்கள் தங்களது மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை வாரத்திற்கு 600 டாலர் கூடுதல் லாபத்தை நான்கு மாதங்கள் வரை பயன்படுத்த ஊக்குவிக்கின்றன.

அமெரிக்கா லாக்டவுன்

அமெரிக்கா லாக்டவுன்

அமெரிக்காவில் கொரோனாவினால் அந்த நாட்டு தொழில்துறை, நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் ஏராளமானோர் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வேலையின்மை நலனுக்காக விண்ணிப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது.

வேலையின்மை அதிகரிக்கும்

வேலையின்மை அதிகரிக்கும்

மேலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இன்னும் வேலையின்மை எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொரோனாவின் தாக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்டு வந்தாலும், அதன் பொருளாதாரம் மீண்டு வர சிறிது காலம் ஆகும். ஆக அங்கு பணி நீக்கங்கள் தலை தூக்கலாம் என்றும், ஆய்வாளர்கள் கடந்த வாரத்திலேயே சில அறிக்கைகள் வெளியாகின.

வேலையின்மை அதிகரிக்கும்

வேலையின்மை அதிகரிக்கும்

மேற்கூறியவாறு பணி நீக்கமானது தலைதூக்கும் போது அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்திற்குள் 15%-ஐ எட்டக்கூடும் ஆய்வாளார்கள் என்று கூறுகின்றனர். இது கடந்த 1930ல் ஏற்பட்ட நீண்டகால நெருக்கடியினை விட மோசமான நிலையாகும்.

தகுதியற்றவர்கள்

தகுதியற்றவர்கள்

ஏற்கனவே பணி நீக்கம் காரணமாக நிறுவனத்தின் ஊதியத்தில் பெறாத தொழிலாளர்கள் - கிக் தொழிலாளர்கள், இலவச லான்சர்கள், சுயதொழில் செய்பவர்கள் - தற்போது வேலையின்மை நலன்களுக்கு தகுதியற்றவர்கள் என கூறப்படுகிறது. ஆக இவர்கள் இந்த கணக்கில் கொண்டு வரப்படுவதில்லை. அவர்களையும் இதில் சேர்த்தால் வேலையின்மை விகிதமான இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பதிவு செய்ய முடிவதில்லை

பதிவு செய்ய முடிவதில்லை

கடந்த சில வாரங்களில் வேலைகளை இழந்த பலர், வேலையின்மை உதவிக்கு பதிவு செய்ய முடியவில்லை, ஏனெனில் மாநில வலைத்தளங்களும் தொலைபேசி அமைப்புகளும் விண்ணப்பதாரர்களின் நொறுக்குதலால் உறைந்து போயுள்ளன. அந்தளவுக்கு மக்களின் வேலையின்மை விகிதமானது விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. இனி இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

வறுமைக்கு செல்ல கூடும்

வறுமைக்கு செல்ல கூடும்

ஐக்கிய நாடுகளில் தொழிலாளர் சபையானது வெளியிட்ட அறிக்கையில், இரண்டாவது காலாண்டில் 195 மில்லியன் முழு நேர ஊழியர்கள் தங்களது வேலையினை இழக்க கூடும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. இது பல கோடி மக்களை வறுமைக்கு செல்லக் கூடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+