ஸ்மார்ட்போன் யுகத்தில் நாம் அனைத்தையும் தொழில்நுட்பம் மூலம் கைக்குள் கொண்டு வந்துவிட்டோம். நம் செல்போனை வைத்தே நம்முடைய அனைத்து தகவல்களையும் ஒருவரால் தெரிந்து கொள்ளமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. வங்கி செயலிகள், தகவல் பரிமாற்ற செயலிகள் என அனைத்தும் ஸ்மார்ட் போன்கள் மூலம் இயக்குகிறோம்.
ஆபத்தாகும் தொழில்நுட்பம்: இந்த நவீன யுகத்தில் பேஸ்புக், கூகுள் உள்ளிட்டவற்றில் கணக்கு வைக்காதவர்களே இருக்க முடியாது. கூகுள் ஜிமெயில் இல்லாமல் ஸ்மார்ட் போனே பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலக அளவில் 19 பில்லியனுக்கும் அதிகமான ஆப்பிள், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட கணக்குகளின் பாஸ்வேர்டு விவரங்கள் கசிந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

பாஸ்வேர்டுகள் கசிவு: நம்முடைய ஜிமெயில் ,பேஸ்புக் உள்ளிட்ட கணக்குகளின் பாஸ்வேர்டை யாருக்கும் தெரிவிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. இந்த தகவல்கள் யாருக்கேனும் தெரிந்துவிட்டால் எளிதாக நம் போனில் ஊடுறுவி ரகசிய தகவல்களை தெரிந்து கொள்வார்கள், ஏன் நம் வங்கி கணக்கில் இருக்கும் பணம், போனில் இருக்கும் படங்கள் ,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை எடுக்க முடியும்.
19 பில்லியன் கணக்குகளுக்கு ஆபத்து: அண்மையில் இப்படி 19 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. இவ்வாறு திருடப்படும் பாஸ்வேர்டுகள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஃபோர்ப்ஸ் தளம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது. இந்த தகவல்கள் சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வெப்நியூஸ் தளத்தின் தலைவர் வில்லியர்ஸ் அளித்துள்ள பேட்டியில் தங்களுடைய நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இதுபோல பேஸ்புக், கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்.

6 மாதங்களில் கசிவு: மொத்தமாக இந்த ஆறு மாதங்களில் மட்டும் இதுபோல 16 பில்லியன் கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டு இருக்கின்றன எனக் கூறியிருக்கும் அவர் வரலாற்றிலேயே இல்லாத அளவாக இது மிகப்பெரிய ஒரு தகவல் திருட்டு எனக் கூறியிருக்கிறார். சமூக வலைத்தளங்கள், விபிஎன் தளங்கள் ,பல்வேறு வணிகங்கள் பயன்படுத்தக்கூடிய கணக்குகளின் பாஸ்வேர்டுகள் என பல தரப்பட்ட சென்சிட்டிவான தகவல்கள் இவ்வாறு திருடப்பட்டு பொதுவெளியில் கசிய விடப்பட்டிருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.
பெரிய ஆபத்து: இதனை வெறும் பாஸ்வேர்ட் கசிவு தகவல்கள் கசிவாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்திருக்கும் அவர் இந்த தகவல்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் நம்முடைய கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என எச்சரிக்கிறார். நம்முடைய சமூக ஊடக கணக்குகளை தவறான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறுகிறார். இனி இது போன்ற சைபர் ரீதியிலான தாக்குதல்கள் அதிகரிக்கும் எனக் கூறியிருக்கும் கீப்பர் செக்யூரிட்டி தளத்தின் தலைமை செயல் அதிகாரியான டாரன் இந்த ஆன்லைன் யுகத்தில் நாம் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க போகிறோம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு தான் என கூறுகிறார்.
பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?: மக்கள் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவ்வப்போது தாங்கள் பயன்படுத்தும் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். பாரம்பரியமாக பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி லாகின் செய்வதற்கு பதில் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் பாஸ் கீ சேவையை பயன்படுத்த அறிவுரை வழங்குகிறார்.
கூகுள் பாஸ் கீ என்றால் என்ன?: பாஸ் கீ என்பதும் ஒரு லாகின் அமைப்பு தான் ஆனால் நாம் இதில் பாஸ்வேர்டை பயன்படுத்த லாகின் செய்ய மாட்டோம். பயோமெட்ரிக் முறையில் மட்டுமே லாகின் செய்ய முடியும். நம்முடைய ஸ்மார்ட்போன் வாயிலாக கூகுள் கணக்குகளுக்கு பாஸ்கீ என்பது உருவாக்கப்படும். அதாவது நம்முடைய கைரேகை, முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் ஸ்மார்ட்போன்களில் பாஸ்கீ என பதிவு செய்யப்படும். நாம் வேறு கருவிகளில் லாகின் செய்யும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த பாஸ் கீ கொண்டு அங்கீகாரம் செய்தால் மட்டுமே லாகின் செய்ய முடியும். பயோமெட்ரிக் தகவல்கள் உங்களின் போனில் மட்டுமே சேமிக்கப்படும் என்பதால் யாராலும் உங்கள் கணக்கை அணுக முடியாது என கூகுள் கூறுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications