இந்த வேகமாக வளரும் டிஜிட்டல் வர்த்தக உலகில் இனி கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் இனி இயங்க முடியாத என்ற நிலைக்கு வந்துள்ளது. கிரிப்டோகரன்சிக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறதோ அதே அளவிற்கு எதிர்ப்பு உள்ளது. இதனாலே பிட்காயின், எதிரியம் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சிகள் சரிந்தாலும் மீண்டும் உயர்ந்து வருகிறது.
கிரிப்டோகரன்சி-யின் ஆதிக்கம் உணர்ந்த காரணத்தினாலேயே பல முன்னணி நாடுகள் (இந்தியா, அமெரிக்கா உட்பட) மொத்தமாகத் தடை செய்யாமல், இத்துறை வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
ஆனால் சீனா கிரிப்டோ உற்பத்தி முதல் வர்த்தகம் வரையில் மொத்தமாகத் தடை விதித்துள்ள காரணத்தால் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
சீனா-வின் தடை
கிரிப்ரோகரன்சி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது சீனா தான், ஆனால் இந்தக் கிரிப்டோகரன்சியில் அரசின் ஆதிக்கம் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்தக் கிரிப்டோகரன்சி தோற்றுப்போக வேண்டும் என்பதற்காகவே சீனா தற்போது மிகப்பெரிய தடையை விதித்துள்ளது.
கூட்டணி சேர்க்கும் சீனா
இது மட்டும் அல்லாமல் சீனா தன்னைப் போலவே கிரிப்டோகரன்சி தடை செய்த நாடுகளுடன் கூட்டணியை அமைத்து மிகப்பெரிய ஆதிக்கத்தைக் காட்ட முடிவு செய்து இந்தத் தடை உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையை அமெரிக்கா புதிய வாய்ப்பாகப் பார்க்கிறது.
எல் சால்வடோர் நாடு
சமீபத்தில் எல் சால்வடோர் நாடு பிட்காயினை அந்நாட்டு அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தது, இது கிரிப்டோ சந்தைக்கும், கிரிப்டோ முதலீட்டாளர்களும் பெரிய அளவில் வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையில் 2 டிரில்லியன் டாலர் மதிப்புடைய கிரிப்டோ சந்தையில் இருந்து சீனா மொத்தமாக விலகியுள்ளது.
அமெரிக்கா முடிவு
இதனால் தற்போது கிரிப்டோ சந்தையை எப்படி ஒழுங்கு முறைப்படுத்துவது என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா. இதனால் கிரிப்டோ சந்தையில் சீனா பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
Recommended Video
புதிய முதலீடுகள்
மேலும் கிரிப்டோ சந்தையில் கிரிப்டோகரன்சி மட்டும் அல்லாமல் தற்போது பிட்காயின் ஈடிஎப், டிஜிட்டல் டோக்கனஸ், NFT எனப் பல முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கும் வந்துள்ளதாலும், நாணயங்கள் தனது வலிமையை இழக்கும் காரணத்தாலும் விரைவில் கிரிப்டோ சந்தை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது.
அமெரிக்கா - சீனா இடையில் போட்டி
இவை அனைத்திற்கும் தாண்டி அமெரிக்கா - சீனா இடையிலான போட்டியாகத் தற்போது மாறியுள்ள நிலையில் விரைவில் கிரிப்டோ சந்தைக்கான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் எலான் மஸ்க் உட்படப் பல டெக் நிறுவனத் தலைவர்கள், முதலீட்டாளர்களும் கிரிப்டோகரன்சிக்கு அதிகளவிலான ஆதரவு அளித்து வருகின்றனர்.
இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் - 42,212 டாலர்
எதிரியம் - 2,906.30 டாலர்
ரிப்பிள் - 0.9177 டாலர்
கார்டானோ - 2.09 டாலர்
போல்காடாட் - 27.45 டாலர்
டோஜ்காயின் - 0.199 டாலர்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications