அமெரிக்கா: உலகளவில் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வு முகமையாக அமெரிக்காவிற்கு சொந்தமான நாசா செயல் பட்டு வருகிறது. உலக விண்வெளி திட்டங்களில் முன்னோடியாக இருக்கக்கூடிய நாசாவில் ஏற்படக்கூடிய எந்த ஒரு மாற்றமும் பேசும் பொருளாக மாறும் .
நாசாவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் சுமார் 20 சதவீதம் பேர் வேலையை விட்டு செல்ல இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அரசின் செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் . இந்த நிலையில் அவர் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக நாசாவில் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது குறைக்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலின்படி Deferred Resignation Program என்ற ஒரு திட்டம் நாசாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அங்கே வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து வேலையில் இருந்து ராஜினாமா செய்யலாம். இந்த திட்டத்தில் 3, 870 பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்களாம் ,அதாவது நாசாவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 20 சதவீதம் பேர் வேலையை விட்டு செல்வதாக விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.
இது நடந்து விட்டால் நாசாவில் வேலை செய்யக்கூடிய சிவில் சர்வென்ட் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது 14000 ஆக குறைந்து விடும், டிரம்ப் பதவியேற்ற பிறகு நடக்கக்கூடிய இரண்டாவது ஊழியர் குறைப்பு நடவடிக்கை இதுவாகும். அதிபராக பதவியேற்ற உடனே அரசு ஊழியர்கள் தாங்களாகவே வேலையில் இருந்து விலகுவதற்கான ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் . அந்த சமயத்தில் நாசாவில் வேலை செய்து வந்து 870 ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு சென்றனர். இது அந்த சமயத்தில் நாசா ஊழியர்களின் எண்ணிக்கையில் 4.8%.

தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது, ஜூலை 25ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தில் தாங்களாகவே வேலை விட்டு விரும்பக் கூடியவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாசாவை விட்டு வெளியேற முன்வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
நாசாவை பொருத்தவரை அடுத்தடுத்து பல்வேறு விண்வெளி திட்டங்களை வைத்திருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் செயல் திறனை மேம்படுத்துவது பட்ஜெட்டை முறையாக ஒதுக்குவது என்பதில் கவனம் செலுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .ஆனால் இப்படி தொடர்ச்சியாக ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பது என்பது நீண்ட கால அடிப்படையில் நாசாவிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
நாசாவிற்கான இடைக்கால அட்மின் இது குறித்து டிரம்புக்கு கடிதம் எழுத்தி இருக்கிறார், அதில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது என்பது நாசாவின் எதிர்கால சிக்கலான திட்டங்களை நிறைவேற்றுவதில் தடையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார் .
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications