என்னதான் அதிக சம்பளம் கொடுத்தாலும்.. அதற்காக யாரும் பிடிக்காத வேலைக்கு செல்வதில்லை. சிலர் குடும்ப சூழல் மற்றும் காலக் கட்டாயத்தின் காரணமாக இது போன்ற வேலைகளில் பணிபுரிவார்கள். ஆனால் சிலரோ மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதற்காக தங்களுக்கு பிடித்த வேலையை செய்வதில் தான் ஆர்வமாக இருப்பார்கள். அதில் சம்பளம் சற்று குறைவாக இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை என்பதுதான் பலருடைய கருத்து. அப்படித்தான் சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் சம்பளத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.
சீனாவை சேர்ந்த 26 வயதான ஹுவாங் என்ற பெண்மணி பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் படித்து முடித்துவிட்டு அந்த பல்கலைக்கழகத்தின் கேண்டினில் பணிபுரிய தொடங்கியுள்ளார். பணத்தைவிட மகிழ்ச்சிதான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த பிறகு அரசு ஊடக நிறுவனங்களில் பயிற்சி பெற்றார் ஹுவாங். இருப்பினும் அவருடைய வேலையில் அவருக்கு திருப்தி இல்லை. அந்த வேலைகளுடன் ஒப்பிடும்போது கேன்டீனில் பணிபுரிவது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடையே அம்மா ஹுவாங் என்று அன்பாக அறியப்படும் இவர் அதிகாலையில் தனது ஷிப்டுகளை தொடங்கி நீண்ட நேரம் வேலை செய்கிறார். பெரும்பாலான நேரங்களில் நின்று கொண்டு உணவு பரிமாறுகிறார். சில நேரங்களில் சூப் அல்லது கஞ்சி போன்றவற்றை நிரப்புவது அல்லது காய்கறிகளை நறுக்குவது என அவருடைய வேலை இருக்கும்.
வேலையின் சவால்களில் ஒன்றை நினைவுகூர்ந்த அவர்.. "ஒரு முறை நான் ஒரு கூடை முழுவதும் மிளகாயை வெட்டி கொண்டிருந்தேன். இதனால் ஏற்பட்ட எரிச்சலால் என் கைகள் வீங்கியது. வலியை தாங்க வேண்டி இருந்தது. ஆனால் மறுநாளே அது மறைந்து விட்டது. வேலையில் உடல் ரீதியான கஷ்டங்கள் இருந்த போதிலும் அதற்கு ஏற்றவாறு நான் இப்போது மாறிவிட்டேன். முதலில் இந்த வேலையில் சோர்வுடன் தான் பணி புரிந்தேன். இருப்பினும் நல்ல இரவு தூக்கம் இதை சரி செய்ய உதவும் என்பதை கண்டுபிடித்தேன்", என்று அந்த பெண் கூறியுள்ளார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் தான் ஹுவாங். பலர் ஹுவாங்கிடம், அவர் வேலை செய்கிறார் என்று கேட்பார்களாம். அதற்கு தான் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறேன் என்று கூறுவாராம். சிலர் அவர் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார் இந்த பெண்மணி.
ஹுவாங் மாதத்திற்கு 6000 யுவான் சம்பாதிக்கிறார். இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.69,000. எதிர்காலத்தில் கேண்டினில் மேனேஜராக வேண்டும் என்பதே அவரின் விருப்பமாம். "எனது பல்கலைக்கழக தோழர்கள் மாதத்திற்கு 20,000 யுவான் சமாதிக்கின்றனர்.
இது இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட ரூ. 2.3 லட்சத்திற்கும் அதிகம். ஆனால் அது எனக்கு கவலை இல்லை. கேண்டினில் பணிபுரிவது எனது விருப்பம். ஏனெனில் அது எனக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது" என்றும் ஹுவாங் கூறியுள்ளார். அவருடைய முடிவு சீனாவில் உள்ள சமூக ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள்! மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டாம்! என்று ஒரு சமூக ஊடகப் பயனர் கருத்து தெரிவித்திருந்தார். இவர் தான் புத்திசாலி.. ஏனென்றால் மகிழ்ச்சியை விட எதுவுமே முக்கியமில்லை! என்று மற்றொரு நபர் எழுதியிருந்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications