வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலே சந்தோஷம்,கொண்டாட்டம். அப்படியிருக்கையில் வாரத்தில் 3 நாள் விடுமுறை என்றால் என்ன சொல்லவா வேண்டும். உலகின் பல நாடுகளும் இந்த திட்டத்தினை அமல்படுத்த முயற்சித்து வருகின்றன.
வாரத்தில் 5 நாள் அல்லது 6 நாள் என்பது மனச் சோர்வை ஏற்படுவத்துவதாக கூறப்படும் நிலையில், வாரத்தில் வெறும் 4 நாட்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கை பல வருடங்களாகவே இருந்து வருகின்றது.
இந்த திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்தினை கூறி வந்தாலும், செயல்பாட்டில் சரிபட்டு வருமா? என்பது பெரும் கேள்வியாக இருந்தது.
சோதனை முயற்சி
ஆனால் இந்த அருமையான திட்டத்தினை இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்கள் சோதனை முயற்சியாக அமல்படுத்தின. இதற்கு பல நிறுவனங்களும் ஒப்புதலும் அளித்திருந்தன. இந்த திட்டத்தில் வேலை நாட்கள் குறைவு என்றாலும் சம்பளம் குறைக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
நிறுவனங்கள் வரவேற்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்தினை சேர்ந்த சுமார் 2900 பேர் இதில் பங்கேற்றனர். இவர்கள் 4 நாட்களில் 34 மணி நேரம் பணியாற்றினர். இதற்கிடையில் 6 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பெரும்பாலான இங்கிலாந்து நிறுவனங்கள் இந்த திட்டத்தினை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஊழியர்கள் பச்சை கொடி
இந்த சோதனையில் 61 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இதில் பணிபுரிந்த ஊழியர்களில் மொத்தம் 92% இந்த திட்டத்திற்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்து ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம்.
மன அழுத்தம் இல்லை
இந்த திட்டத்தின் மூலம் சிறந்த வேலை, வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 நாள் வேலை திட்டத்தில் மன அழுத்தம் என்பது கணிசமான குறைந்துள்ளதாகவும், 71% அதிகமான ஊழியர்கள் குறைந்த சோர்வே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கவலை, சோர்வு மற்றும் தூக்கப் பிரச்சனைகள் என்பது குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காராணமாக நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் சாத்தியமும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் வெற்றி
ஏற்கனவே இதனை சில நாடுகள் சோதனை நடத்தி, வெற்றிகரமாக முடிவினையும் கொடுத்துள்ளன. பல நாடுகளும் இதனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், இங்கிலாந்தின் வெற்றி பெற்றுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இந்தியாவிலும் அமலுக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது புரிகிறது.. எதிர்காலத்தில் இந்தியாவிலும் வந்தாலும் சொல்வதற்கில்லை தான்....
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications