லண்டன்: பிரிட்டனை சேர்ந்த சுமார் 200 நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் ஊழியர்கள் பணி அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் தவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் சமன் செய்ய முடியாமல் பலரும் தவிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பல்வேறு நாடுகளிலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் எழுந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிரிட்டனை சேர்ந்த சுமார் 200 நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே ஊழியர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. பிரிட்டனில் தொடங்கப்பட்டிருக்கும் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை அறக்கட்டளை என்ற அமைப்பில் இந்த 200 நிறுவனங்களும் இணைந்து இருக்கின்றன. இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இனி வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டுமே அலுவலகத்திற்காக வேலை செய்தால் போதும்.
இந்த 200 நிறுவனங்களும் சுமார் 5,000க்கும் அதிகமான ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன. இவற்றில் பெரும்பாலும் மார்க்கெட்டிங் மற்றும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற அறக்கட்டளையின் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய ஜோ ரைம், காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேலை செய்வது, வாரத்தில் ஐந்து நாட்களுக்கு வேலை செய்வது இதெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை , தற்போது நம்முடைய உலகமே பெரும் அளவில் மாற்றம் அடைந்து விட்டது தற்போதைய சூழலுக்கு இது ஒத்து வராது என்கிறார். வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என கூறுகிறார்.
இவ்வாறு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மீதமுள்ள நேரத்தை குடும்பத்தினருடனும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்வார்கள். அவ்வாறு இருக்கும் ஊழியர்கள் மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதோடு மட்டும் இல்லாமல் வேலைக்கு வரும்போது மிக உற்சாகமாக வேலை செய்வார்கள். எனவே ஐந்து நாட்களில் செய்யும் வேலையை நான்கு நாட்களிலேயே கூடுதல் செயல் திறனுடன் முடித்து விட முடியும் என இவர் கூறுகிறார்.
200க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த நடைமுறையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறுகிறார். இந்தியாவில் வாரத்திற்கு 70 மணி நேரம், 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பெரு நிறுவனங்களின் தலைவர்கள் கூறி வரக்கூடிய நிலையில், பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
முன்னதாக பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் 18 முதல் 34 வயது உட்பட்ட நபர்களில் சுமார் 78% பேர் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர், சுமார் 65 % பேர் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்புவதாக கூறியுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications