அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால் ஜப்பான், சீனா, ஹாங்காங், இந்திய பங்குச்சந்தை என அனைத்து முன்னணி பங்குச்சந்தையும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
இந்தச் சரிவில் உலகின் டாப் 500 பணக்காரர்கள் மட்டும் சுமார் 114 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இழந்துள்ளனர். இது அனைத்தும் திங்கட்கிழமை வர்த்தகத்தின் வாயிலாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாரன் பஃபெட்
உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்கும் வாரன் பஃபெட், 114 பில்லியன் டாலரை இழந்த 500 பணக்காரர்களில் அதிகப்படியாக ஒரு நாளில் 5.1 பில்லியன் டாலர் வரையிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
இவர் உலகின் 3வது மிகப்பெரிய பணக்காரர்.
பெர்ஷைர்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் வெல்ஸ் பார்கோ அண்ட் கோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 9.2 சதவீதம் வரையில் சரிவை சந்தித்தது. இதுவே எஸ்அண்ட் பி 500 குறியீட்டில் அதிகளவிலான சரிவை சந்தித்த நிறுவனம்.
இந்நிறுவனத்தின் அதிகளவிலான பங்கு இருப்பை வைத்துள்ளது பெர்ஷைர். இது வாரன் பஃபெட் தலைமையில் இயங்கும் ஒரு நிறுவனம். இதன் வாயிலாகவே பஃபெட் அதிகளவிலான இழப்பைச் சந்தித்தார்.
வாரன் பஃபெட்
87 வயதாகும் வாரன் பஃபெட் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 5.1 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை இழந்துள்ளார்.
1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை இழந்த பில்லியனர்களில் வாரன் பஃபெட் அவர்களும் ஒருவர்.
பேஸ்புக்
உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 3.6 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை இழந்துள்ளார்.
இவர் வாரன் பஃபெட்க்கு அடுத்தாக அதிகளவில் சொத்துக்களை இழந்துள்ளனர்.
ஜெப் பீசோஸ்
சமீபத்தில் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தைப் பிடித்த அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 3.3 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்தார்.
இதனால் இவரின் சொத்து மதிப்பு 116.4 பில்லியன் டாலராகக் குறைந்தது.
கூகிள் தலைகள்
இவர்களைத் தொடர்ந்து கூகிள் நிறுவனத்தின் தலைவர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தலா 2.3 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை இழந்தனர்.
அமெரிக்கச் சந்தை
அமெரிக்காவின் ஜனவரி மாத வேலைவாய்ப்புத் தரவுகள், வட்டி உயர்வுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதன் காரணமாக அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் குறியீடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1,100 புள்ளிகள் வரையில் சரிந்தது. இது கடந்த 6.5 வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.
வேலைவாய்ப்புத் தரவுகள்
அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் மட்டும் 2,00,000 ஆக உயர்ந்துள்ளது, இது 1,80,000 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் 20,000 வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 8.5 வருடத்தில் ஜனவரி மாதத்திலேயே அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதான் பிரச்சனை
இதனால் தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து, பத்திர முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அமெரிக்கப் பங்குச்சந்தையின் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தியர்கள் பாதிப்பு!
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications