உலகின் டாப் 100 புதுமையான நிறுவனங்களில் டிசிஎஸ்!! ஃபோர்ப்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலகளவில் மிகவும் பிரலமான பத்திரக்கை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அவ்வபோது ஆய்வு அறிக்கைகளை வெளியிடும். இந்த வகையில் புதன் கிழமை இந்நிறுவனம் வோல்டு 100 மோஸ்ட் இண்னோவேடிவ் கம்பனிஸ் என்ற தலைப்பில் உலகின் டாப் 100 புதுமையான நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் 5 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இப்பட்டியலில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் சேரத்து மொத்தம் 5 நிறுவனங்கள் இடபெற்றுள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

இப்பட்டியலில் கடந்த நான்கு வருடமாக முதல் இடத்தை தக்கவைத்து கொண்ட கிளவுட் கம்பியூடிங் நிறுவனமான சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த வருடமும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

டாப் 5 இடங்கள்

டாப் 5 இடங்கள்

முதல் இடத்தை சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் பெற்றதை அடுத்து அலிக்சியான் பார்மா நிறுவனம், ஆர்ம் ஹோல்டிங்ஸ் (ARM), யூனிலீவர் இந்தோனேஷியா மற்றும் ரிஜெனரான் பார்மா அகிய நிறுவனங்கள் அடுத்த 5 இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியா நிறுவனங்கள்

இந்தியா நிறுவனங்கள்

இப்பட்டியலில் 5 இடங்களை பிடித்த இந்திய நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவநம் 54.7 சதவீதம் பெற்று 14வது இடத்தை பிடித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா குழுமத்தின் மிகப்பெரிய சொத்தாக திகழும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 39.58 சதவீத மதிப்பீடு பெற்று இப்பட்டியலில் 57வது இடத்தை பெற்றுள்ளது.

லார்சன் அண்ட் டூப்ரோ

லார்சன் அண்ட் டூப்ரோ

இந்தியாவில் சுரங்கம் மற்றும் கட்டுமான துறையின் மிகப்பெரிய நிறுவனமான லார்சன் அண்டு டியூப்ரோ 39.4 சதவீதம் பெற்று 58வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 19.81 பில்லியன் டாலர் ஆகும்.

சன் பார்மா

சன் பார்மா

1983ஆம் ஆண்டு ஒரு சிறு குழுவுடன் துவங்கிய இந்நிறுவனம் 38.34 சதவீதம் பெற்றும் இப்பட்டியலில் 65வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்வி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒரு ஆவார். 21 வருட வர்த்தகத்தில் இவர் பிடித்துள்ள இடம் அசாதரமானது.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ

இந்தியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 31.73 சதவீத மதிப்பீடு பெற்றும் 96 வது இடத்தை பெற்றதுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Indian firms among Forbes’ most innovative companies

Five Indian companies, including Hindustan Unilever and Tata Consultancy Services, are among Forbes’ list of the world’s 100 most innovative companies that investors think are most likely to “generate big, new growth ideas“.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X