சில நிறுவனங்கள் இவரை நேரடியாகவே தேர்தல் நேரத்தில் எதிர்த்துப் பேசினர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்போ உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.
அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் அமெரிக்க டெக்னாலஜி நிறுவனங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்று அனைவருக்கும் தெரியும்.
உண்மையில் சில நிறுவனங்கள் இவரை நேரடியாகவே தேர்தல் நேரத்தில் எதிர்த்துப் பேசினர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்போ உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான சிலவற்றை இங்குப் பார்ப்போம்.
கூட்டத்தில் பங்கேற்ற பெறும் தலைகள்
கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பெறும் தலைகள் என்றால் அது பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சத்ய நாடெல்லா, ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஃப்ரா காட்ஸ், சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ், ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜின்னி ரோமெட்டி, இண்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரெய்ன் கிரானிச், ஆல்பாபெட் நிறுவன தலைவர் எரிக் ஷ்மிட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி பேஜ் உட்பட்டோர் ஆவார்கள்.
டிம் குக் மற்றும் எலோன் மஸ்க்கிற்கு கூடுதல் நேரம்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் இருவரும் கூடுதலாக நேரம் பெற்றும் டிரம்ப்புடன் புதன் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்கள் என்று ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கலகலப்பாகப் பேசினார் டிரம்ப்
கலகலப்பாகப் பேசுவதற்கு சொந்தக்காரரான டிரம்ப் டெக் தலைமை செயல் அதிகாரிகளிடம் ‘நான் இங்கு உங்களுக்கு உதவுவதற்காகவே உள்ளேன் என்றும். என்னை எதிர்ப்பவர்களுக்கு மதிப்பளிக்கிறேன் என்றும் தெரிவித்தார்'.
மேலும் அனைவரும் என்னை எதிர்ப்பது பற்றி பேசுகின்றனர், ஆனால் இந்தச் சரையில் உள்ள அனைவரும் இப்போது என்னைக் கொஞ்சமாவது விரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒரே நிறுவனம் ஆனால் வெவ்வேறு இடத்தில் இருக்கை
பிஸ்னஸ் இன்சைடர் அறிக்கையின் படி ஒரே நிறுவனத்தில் இருந்த வந்த ஊழியர்களை ஒன்றாக அமர வைக்கவில்லை என்றும், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தே கூட்டத்தில் பங்கேற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. சத்ய நாடெல்லாவும் மைக்ரோசப்ட் நிறுவனத்தின் தலைமை சட்ட அலுவலர் பிராட் ஸ்மித்தும் எதிர் எதிராக அமர வைக்கப்பட்டிருந்தனர்.
விருந்தினர் பட்டியலை உருவாக்கிய பீட்டர் தீயல்
விருந்தினர் பட்டியலை உருவாக்க பேபால் நிறுவனத்தின் இணை நிறுவனர் பீட்டர் தீயல் உதவியதாகவும், இவர்தான் டிரம்ப் உடனான இந்தக் கூட்டத்திற்கு பாலமாக இருந்ததாகவும் கூறப்படிகின்றது.
ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டம்
டிரம்ப்பின் குழுவின் படி இப்போது நடந்த கூட்டத்தை போன்று ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டம் நடைபெறும்.
டிவிட்டர் நிறுவனத்திற்கு அழைப்பு இல்லை
டிவிட்டர் நிறுவனத்தை இந்த கூட்டத்திற்கு டிரம்ப் அழைக்கவில்லை என்றும் இதற்குக் காரணம் அது சிறிய நிறுவனம் என்றும் கூறப்படுகின்றது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தேர்தலில் போது டிரம்ப் டிவிட்டரைப் பெறும் அளவில் தனது பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தினார் என்பது ஆகும்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications