சூதாட்டம் ஒரு நிறுவனத்தை காப்பாற்றிய கதை தெரியுமா உங்களுக்கு..?

சூதாட்டம் பல குடும்பங்களை அழித்துள்ளதை தான் நாம் அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் இங்கு சூதாட்டத்தின் மூலம் ஒரு நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்து 30பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக மாறியுள்ளது

இந்த உலகில் என்றுமே ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிகளுக்குக் குறைவில்லை. அதற்கு வணிக உலகமும் விலக்கல்ல.

உங்களைச் சலிப்படையச் செய்யும் பல்வேறு வணிக உலகத் தரவுகளைத் தவிர்த்து சில உண்மைகள் உங்களுக்குக் கண்டிப்பாக அதிர்ச்சியளிக்கும். அத்தகைய செய்திகளைத் தோண்டி எடுத்து உங்களுக்காக இங்கே கொடுத்துள்ளோம்.

உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் 9 வணிக உலக உண்மைகள்:

நாணயத்தால் 4.4 பில்லியன் டாலர் சேமிப்பு

நாணயத்தால் 4.4 பில்லியன் டாலர் சேமிப்பு

அமெரிக்க ஐக்கிய நாடுகள் தன்னுடைய ஒரு டாலர் காகித நோட்டை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக ஒரு டாலர் நாணயங்களை அச்சடித்து வெளியிட்டால், அதனால் 30 ஆண்டுகளில் சுமார் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சேமிக்க இயலும் என ஒரு அரசு பொறுப்பு அலுவலகம் அறிக்கை தெரிவிக்கின்றது.

இங்கு 'காற்று' விற்கப்படும்

இங்கு 'காற்று' விற்கப்படும்

சீனாவில் மாசுபட்ட காற்றை எதிர்கொள்ளும் வகையில், மில்லியனர் சென் குவங்பியாவ் கேன்களில் காற்றை அடைத்து விற்று விற்பனை செய்தார். 10 நாட்களில் விற்பனையில் சுமார் 8 மில்லியன் கேன்களை விற்று அசத்தினார். இதன் மூலம் அவர் தற்போது வருடத்திற்குச் சுமார் 6 மில்லியன் டாலர்கள் வருமானத்தைப் பெற்று வருகிறார்.

லக்ஷமி ஒரு முறைதான் கதவை தட்டும்

லக்ஷமி ஒரு முறைதான் கதவை தட்டும்

ரொனால்ட் வெய்ன் அவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னிக் உடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய மூன்றாவது நிறுவனர் ஆவார். அவர் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்த 12 நாட்களில், தன்னுடைய பங்குகளைச் சுமார் 800 டாலர்களுக்கு விற்று விட்டார். அவ்வாறு இல்லாமல் அவரின் 10 சதவீத ஆப்பிள் பங்குகள் அவரிடமே தற்பொழுது இருந்திருந்தால், அவருடைய சொத்து மதிப்பு சுமார் 35 பில்லியன் டாலர்களாக இருக்கும்.

ஆயுத உற்பத்தி செய்யும் சாம்சங்

ஆயுத உற்பத்தி செய்யும் சாம்சங்

உலகின் மிகச் சிறந்த ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகச் சாம்சங் விளங்குகின்றது. ஸ்மார்ட் போன் வணிகத்தைத் தவிர்த்துச் சாம்சங் நிறுவனம், மின்னணு , ஆயுத உற்பத்தி, ஆயுள் காப்பீடு, மற்றும் தீம் பார்க் மேலாண்மை ஆகிய பிற வணிகங்களிலும் ஈடுபடு வருகிறது எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு சைக்கிள் மற்றும் 100 டாலர் கடன்

ஒரு சைக்கிள் மற்றும் 100 டாலர் கடன்

உலகின் மிகப்பெரிய பார்சல் கையாளும் நிறுவனமான யுபிஎஸ் நிறுவனம், இரு இளைஞர்களால், ஒரு சைக்கிள் மற்றும் நண்பர்களிடம் கடனாகப் பெற்ற 100 டாலர் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா.?

தற்போது இந்நிறுவனத்தின் வருவாய் 58 பில்லியன் டாலர்.

 

வறுமையும்.. உலகமும்..

வறுமையும்.. உலகமும்..

உலகில் வறுமையை ஒழிக்கத் தேவைப்பும் பணத்தைத்திற்கு நான்கு மடங்கு அதிகமாக உலகின் முதல் 100 பெரும் செல்வந்தர்களின் வருமானம் பெறுகின்றனர். இது 2012ஆம் ஆண்டின் கணக்கு.

 

 

10 டாலர் - 690 ரூபாய்

10 டாலர் - 690 ரூபாய்

உங்கள் கையில் தற்போது 10 டாலர், மற்றும் உங்களுக்குக் கடன் எதுவும் இல்லாமல் இருந்தால், நீங்கள் சுமார் 25 சதவீத அமெரிக்க மக்களை விட ஒரு சிறந்த நிதி நிலையில் இருக்கின்றீர்கள் என அர்த்தம்.

பாவம்..

பாவம்..

1999 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனர் அந்த நிறுவனத்தைச் சுமார் 1 மில்லியன் டாலர்களுக்கு எக்ஸைட் நிறுவனத்திற்கு விற்க முன் வந்தனர். எனினும் எக்ஸைட் நிறுவனம் அந்த வாய்ப்பைத் தவற விட்டது.

சூதாட்டம் ஒரு நிறுவனத்தைக் காப்பாற்றியது..!

சூதாட்டம் ஒரு நிறுவனத்தைக் காப்பாற்றியது..!

1974 ம் ஆண்டில் பெடெக்ஸ் நிறுவனம் திவால் ஆகும் நிலையில் இருந்தது. அந்த நிறுவனத்தின் நிறுவனர், பெடெக்ஸ் நிறுவனத்தின் கடைசிச் சொத்தான சுமார் 5,000 டாலர்களை எடுத்துச் சென்று லாஸ் வேகாஸ் நகரச் சூதாட்ட விடுதிகளில் சூதாடி சுமார் $ 32,000 டாலர்களாக மாற்றினார்.

அந்த 32,000 டாலர்கள் பெடெக்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற உதவியது. இன்று பெடெக்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+