1967 ஆகஸ்ட் 19-ம் தேதி பிறந்த சத்ய நாடெல்லாவுக்கு இப்போது வயது 49. இந்தியாவில் பிறந்த இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் அமெரிக்கர் அல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2014 ஃபிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இவர் மென்பொருள் துறையில் 14 வருடம் சிஇஓ ஆக இருந்த ஸ்டீவ் பால்மரை பின்னுக்குத் தள்ளி இந்த இடத்தைப் பிடித்தார்.
நாம் இவரைப் பற்றிய 9 சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இங்குப் பார்ப்போம்.
கல்வி
ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு மணிப்பால் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து 1988-ம் வருடம் பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்கா சென்ற இவர் மில்வாக்கில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினி அறிவியல் படிப்பில் தனது முதுகலைப் பட்டத்தை பெற்றார்.
அதுமட்டும் இல்லாமல் சிகாகோ தான் பூத் பிஸினஸ் பள்ளி பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார்.
1992 இல் மைக்ரோசாப்ட்டில் சேர்ந்தார்
முதலில் ஆரக்கில் நிறுவனத்தின் சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தில் பணிபுதிந்து வந்த நாடெல்லா 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டில் சேர்ந்தார்.
இந்நிறுவனத்தில் நீண்ட காலம் பயணம் செய்யும் நாடெல்லா பிங் தேடுபொறி மைக்ரோசாப்ட்டுக்கு பெரிய மணிமகுடமாக இருந்ததில்லை என்றாலும் அதன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
மைக்ரோசாப்ட்டில் நாடெல்லாவின் பங்களிப்பு
மைக்ரோசாஃப்ட்டின் கிளவுட் மென்பொருளான அஷூர்(Azure)-இல் மைக்ரோசாஃப்ட்டின் பிரபல தொழில்நுட்பங்களான டேட்டாபேஸ், விண்டோஸ் சர்வர் மற்றும் பிற டெவெலப்பர் கருவிகளைச் சேர்த்ததில் முக்கிய பங்காற்றினார்.
மைக்ரோசாப்ட் ஆபிஸின் கிளவுட் பதிப்பான ஆபிஸ் 365-ஐ உருவாக்குவதற்கும் நாடெலா உதவினார். ஆபிஸ் 365 தான் இந்நிறுவனத்தின் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மென்பொருள் என மைக்ரோசாஃப்ட் கூறுவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி பருவக் காதலியுடன் திருமணம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்த அதே 1992 ஆண்டு நாடெல்லா தனது பள்ளி பருவக் காதிலியை மணமுடித்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாஷிங்டன்னில் வசித்து வருகிறார்.
கிரிக்கெட் மீதான காதல்
பெரும்பாலான இந்தியர்களைப் போன்று நடெல்லாவும் கிரிக்கெட் ரசிகரே, தனது பள்ளியின் கிரிக்கெட் அணியில் இவரும் விளையாடி வந்துள்ளார். இது பற்றி ஹைதராபாத்தின் டெக்கன் க்ரானிக்கல் செய்திக்கு அளித்த பேட்டியில் குழுப்பணி மற்றும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள கிரெக்கெட் தனக்கு உதவியதாகக் கூறியுள்ளார்.
இவருக்கு கிரிக்கெட்டில் பெரிதும் பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். அதேபோல ரஷ்யா நாவல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
கவிதை
கவிதைகளை மிகவும் விரும்பிப் படிக்க கூடியவர். மைக்ரோசாஃப்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள நாடெல்லாவின் சுயவிவரத்தில் இவருடைய பொழுதுபோக்குகளில் கவிதை வாசித்தலும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி இவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு "இது மென்பொருள் கோட் போன்றது. பக்கம் பக்கமாக சொல்ல வேண்டியதை அழகாக ஒரே வரியில் கவிதையில் கூறிவிடலாம்" என்பார்.
அதிக சம்பளம் பெறும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரி
ஈஃவிலார் சர்வேயின் படி அமெரிக்காவின் 200 அதிக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளில் சத்ய நாடெல்லாவே முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பார்க்கும் போது ஆண்டுக்கு 84,308,755 மில்லியன் டாலர்கள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
வழிகாட்டியாக பில் கேட்ஸ்
மைக்ரோசாஃப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக தன்னை தேர்வு செய்த உடன் அவரது வழிகாட்டியாக பில் கேட்ஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகம் எழுதுதல்
ஹிட் ரீஃப்ரெஷ் (Hit Refresh) என்ற பெயரில் புத்தகம் ஒன்று எழுதி வருகிறார். நாடெல்லாவின் தனிப்பட்ட வழக்கை மாற்றங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், நுண்ணறிவு இயந்திரம் பற்றி என இந்தப் புத்தகம் மூன்று கதைக்களங்களில் நடப்பதாக இவர் எழுதி வருவதாகக் கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சியாட்டில் ஷீஹாவ்க்ஸ் ரசிகர்
அமெரிக்காவின் தொழிமுறை கால் பந்து அணியான சியாட்டில் ஷீஹாவ்க்ஸ் ரசிகர் என்றும் கூரப்படுகிறது.


Click it and Unblock the Notifications