ஈரான்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தன்னுடைய விமானப்படை மூலம் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.
தற்போதைக்கு ஈரான் உடனான மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்த சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா கமேனியின் பிரதான ஆலோசகராக இருக்கக்கூடிய ஜாவத் லாரிஜினி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் நினைத்தால் ஒரு ட்ரோனை அனுப்பி அமெரிக்காவிலேயே டிரம்பை கொலை செய்து விடுவோம் என கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஒரு ஆடம்பர பங்களா இருக்கிறது இந்த பங்களாவில் தான் டிரம்ப் அடிக்கடி தங்குவார். இந்த நிலையில் அந்த பங்களாவிலேயே வைத்து டிரம்பை கொலை செய்வதற்கு ஒரு சிறிய ட்ரோன் போதுமானது என ஜாவித் கூறியிருக்கிறார். டிரம்ப் இந்த பங்களாவில் தான் அடிக்கடி தங்குவார் அங்கே அவர் சன் பாத் எடுப்பார் என்பது எங்களுக்கு தெரியும் அந்த சமயத்திலேயே ஒரு டிரோனை அனுப்பி கொலை செய்து விடுவோம் என கூறி இருக்கிறார்.
ஈரான் மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். டிரம்பை கொலை செய்ய வேண்டும் என ஈரானில் ஆன்லைன் பரப்புரையே நடைபெறுகிறது. கிரவுட் ஃபண்டிங் முறையில் இதற்காக நிதியும் திரட்டுகிறார்களாம். ஜூலை 7ஆம் தேதி வரை டிரம்பை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக 27 மில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாம்.
100 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டுவதை இலக்காக கொண்டிருக்கிறார்களாம். அமெரிக்க அதிபர் டிரம்பை யார் கொலை செய்கிறார்களோ அவருக்கு இந்த 100 மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டிரம்பை கொலை செய்வோம் என ஈரான் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!



Click it and Unblock the Notifications