26 இன்ச் இடுப்புக்கு ரூ.200 கோடி இன்ஷூரன்ஸா..? என்னம்மா நீங்க இப்புடி பண்றீங்களேம்மா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக இன்ஷூரன்ஸ் என்றால், நாம் எல்லாம் என்ன செய்வோம். ஒரு 50 லட்சம் அல்லது ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்து"நான் செத்துவிட்டால், என் குடும்பத்துக்கு இந்த காசு வரட்டும்" என நாமினிக்கள் பெயரைப் போட்டு இன்ஷூரன்ஸ் எடுப்போம்.

வீட்டு வாடகை, பால், மளிகை, EB, கேஸ், பள்ளிக் கட்டணம், டூ வீலர் சர்வீஸ், மனைவிக்கு புதுத் துணி, அப்பாவின் கண்ணாடி ரிப்பேர், அம்மாவுக்கான rheumatology Test, நம் நண்பன் கல்யாண மொய், ஊரில் கோவில் கொடை போக்குவரத்து என எல்லா செலவு போக போக கையில் சில்லறை இருக்காது. நம்மிடம் ஒரு 10 லட்சம் ரூபாய்க்கு கூட லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்க நம்மிடம் காசு இருக்காது அது தான் எதார்த்த நிதர்சனம். அதையும் மீறி பணம் இருந்தால்.. அரசு வேலையில் இருந்தால்... ஹெல்த் இன்ஷூரன்ஸ் வேண்டுமானால் எடுப்போம்.

 

ஆனால் இங்கு ஒரு 10 பேர் உடல் பாகங்களுக்கு எல்லாம் கோடி கணக்கில் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். அவர்களையும், அவர்கள் எந்த உடல் பகுதிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார்கள் என்பதையும் தான் பார்க்கப் போகிறோம். வாங்க நாக்குலேர்ந்து பாப்போம்.

குழந்தை பள்ளிக்கு சென்றால் தாய்க்கு ரூ.15,000.. கலக்கும் அதிரடி திட்டங்கள்.. அசத்தும் ஜெகன் மோகன்

Miley Cyrus - நாக்கு

Miley Cyrus - நாக்கு

See You Again, 7 Things, The Climb, Can't Be Tamed, We Can't Stop, Malibu, Wrecking Ball" என உலக பாப் மற்றும் ஹிப் ஹாப் ஜானர்களை ஆண்டு கொண்டிருக்கும் 90-ஸ் கிட் தான் நம் Miley Cyrus. நம் சைரஸின் பாடல் திறமையை விடவும், விஸ்வகர்மா செதுக்கிய சிலை அழகை விடவும், , புகழடைந்தது அவருடைய எக்ஸ்ட்ரா லெந்த் ரோஸ்மில்க் நாக்கு தான். தொடர்ந்து புகைப்பதால் இப்போது நாக்கின் நிறம் கொஞ்சம் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள் மிலி குட்டி ரசிகர்கள்.

நாக்கு போஸ்

நாக்கு போஸ்

இந்த 51 கிலோ மார்ஷ்மெல்லோ, ஒரு விருது விழாவில் எதார்த்தமாக நாக்கை இடப் பக்கம் ஒழுக்கழித்து ஒரு போஸ் கொடுக்க, இணையக் கிழவியில் ஹிட். பின் அதையே தன் டிரேட் மார்க் போஸ்களில் ஒன்றாக கொடுக்கத் தொடங்கிவிட்டார். இந்த போஸ் MTV வீடியோ மியூசிக் விருது விழாவிலும் கொடுக்க வேற லெவலுக்கு வேதாள ஹிட் அடித்தது. அந்த ஹிட் அடித்த சூட்டிலேயே"நம்மல விட நம்ம நாக்கத்தான்யா எல்லா பயலும் மதிக்கிறான், நாள பின்ன... நம்ம நாக்குல ஏதாவது பிரச்சனைன்னா நம்ம பொழப்புல ஒரு லோடு காவிரி மண்ணத் தூவிருவாய்ங்க" என உஷாராக ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ.7 கோடிக்கு) இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டார்.

நாக்கு சாட்சி
 

Miley Cyrus தன்னுடைய Miley Cyrus And Her Dead Petz என்கிற ஆல்பத்தில் Dooo It என்கிற பாடலில், வெறுமனே தன் வாய் மற்றும் நாக்கை மட்டுமே விஷுவலாக வைத்து பெருவாரியான இளசுகளின் வாயில் வாட்டர் ஃபால்ஸ் வர வைத்தார். நம் மிலி சைரஸின் நாக்கு சாட்சியாக இருக்கும் அந்த வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=wu5iAgJ65dA

இன்று வரை Miley Cyrus எங்கு போனாலும், யார் பேட்டி கண்டாலும் "உங்க நாக்கு போஸ் கொடுங்க" எனக் கேட்டு வெறுப்பேத்துவதாக மிலி-ம்மா சீரியஸாக கோபித்துக் கொள்கிறாளாம்.

 நாக்கு சாட்சி

நாக்கு சாட்சி

Miley Cyrus தன்னுடைய Miley Cyrus And Her Dead Petz என்கிற ஆல்பத்தில் Dooo It என்கிற பாடலில், வெறுமனே தன் வாய் மற்றும் நாக்கை மட்டுமே விஷுவலாக வைத்து பெருவாரியான இளசுகளின் வாயில் வாட்டர் ஃபால்ஸ் வர வைத்தார். நம் மிலி சைரஸின் நாக்கு சாட்சியாக இருக்கும் அந்த வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=wu5iAgJ65dA

இன்று வரை Miley Cyrus எங்கு போனாலும், யார் பேட்டி கண்டாலும் "உங்க நாக்கு போஸ் கொடுங்க" எனக் கேட்டு வெறுப்பேத்துவதாக மிலி-ம்மா சீரியஸாக கோபித்துக் கொள்கிறாளாம்.

Kim Kardashian - பிருட்டம்

Kim Kardashian - பிருட்டம்

அத்தை kim kardhasian 8 வடிவ 38 - 26 - 42 உடல் அமைப்பால் இணைய கிழவிக்கே இளமை வரவைத்த ஆண்டி அழகி. இந்த 38 வயது சப்பி கர்வி ஆண்டியைப் பற்றி உலகின் முன்னனி பத்திரிகைகளான Times, Vogue... தொடங்கி உள்ளூர் பத்திரிகைகள் வரை பே(சினா)(சுகிறா)(சுவா)ர்கள். புரியலன்னா மன்னிக்கவும்.

......பேசினார்கள்

...பேசுகிறார்கள்...

பேசுவார்கள்......!

காரணம் மேலே சொன்ன 38 - 26 - 42 தான். இந்த உடல் அமைப்புக்கு மட்டும் சுமார் 61 கோடி ரூபாய் செலவழித்து தலை முடி, மூக்கு, கண்ணம், உதவு, மார்பு, விலா எழும்பு, பிருட்டம் என சகட்டு மேனிக்கு தன் இயற்கையான பாடி செட்டிங்ஸை கஸ்டமைஸ் செய்திருக்கிறாராம்.

புகழ்

புகழ்

காரணம் மேலே சொன்ன 38 - 26 - 42 தான். இந்த உடல் அமைப்புக்கு மட்டும் சுமார் 61 கோடி ரூபாய் செலவழித்து தலை முடி, மூக்கு, கன்னம், உதடு, மார்பு, விலா எலும்பு, பிருட்டம் என சகட்டு மேனிக்கு தன் இயற்கையான பாடி செட்டிங்ஸை கஸ்டமைஸ் செய்திருக்கிறாராம்.

வியாபாரம்

வியாபாரம்

Keeping Up with the Kardashians என ஒரு டிவி சீசிஸைத் தொடங்கி கல்லா கட்டி, இன்று பல பிசினஸைச் செய்து 2600 கோடிக்கு சொத்து சேர்த்துவிட்டார். இப்போது அத்தை கிம் கும்பிடும் ஆண்டவன், அவளின் மொத்த அழகையும் அங்கே (பிருட்டத்தில்) வைத்திருப்பதாக நம்புவதால், தன் பிருட்டத்தை 21 மில்லியன் டாலருக்கு (ரூ.147 கோடிக்கு) இன்ஷூரன்ஸ் செய்திருக்கிறாராம். "இப்புடி ஒரு ஆண்டி இந்தியாவுல இருந்திருந்தா எல்லா பயலும் ஆண்டி இந்தியானாவே இருந்திருப்போமே" என நம் பின்னழகி கிம்மை கொஞ்சும் இந்தியர்கள் எண்ணிக்கை, கொஞ்சம் அதிகம் எனவும் சில தரவுகள் சொல்கின்றன.

Taylor Swift - கால்கள்

Taylor Swift - கால்கள்

உலகின் டாப் 10 உன் குழாய் (You tube) வீடியோக்களில் எட்ட முடியாத 8-வது இடத்தில் இருப்பது லட்டு குட்டி Taylor Swift-ன் "ஷேக் இட் ஆஃப்" தான். தற்போது 2500 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஆந்தைக் கண்ணழகி 2004-ல் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது... தானே பாட்டெழுதி பாடத் தொடங்கிவிட்டாள்.

விருதுகள்

விருதுகள்

அப்புறம் என்ன, காலேஜ் ஃபைனல் இயர் முடிப்பதற்குள் 2009-லேயே Fearless ஆல்பம் பாடி 4 கிராமி விருதுகளை ஜோடி 10 ரூபாய்க்கு வாங்கினார். அன்றில் இருந்து இன்று வரை மோகினி Taylor Swift-ன் இசை இந்த நீல பூலோக குளோப்ஜாமூன் மீது பரவிக் கொண்டே இருக்கிறது. இப்போது வரை சுமார் 325 சர்வதேச விருதுகளை வாங்கி முன்னணி பாடகியாக கேட்டி பெர்ரிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஹாலிவுட் நயன்

ஹாலிவுட் நயன்

1990-களில் ஹாலிவுட்டின் நயன்தாராவாக வலம் வந்தவர். Pretty Women என்கிற படத்தின் மூலம், அந்த காலத்திலேயே 464 மில்லியன் டாலர் பாக்ஸ் ஆஃபிஸ் கொடுத்து, வசூல் ராணியாக வலம் வந்தவர். 1990-களில் இவரை படத்தில் நடிக்க வைக்க மில்லியன் டாலரில் சம்பளம் கொடுக்க வேண்டும். அன்றைய தேதிக்கு ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நம் ஜூலியா ராபர்ட் தான். 2003-ல் Mona lisa smile படத்துக்கு 25 மில்லியன் சம்பளம் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய தேதிக்கு அவெஞ்சரில் நடிக்கும் ஸ்கார்லெட் ஜொஹான்சனுக்கு கூட இவ்வளவு சம்பளம் கிடையாது என்பதை...

280 கோடியா..?

280 கோடியா..?

நம் நீலக் கண்ணழகி, கச்சேரிகளில் பாடிக் கொண்டிருக்குப் போதே... "பொண்ணு கால பார்யா என்ன வழு வழு-ன்னு இருக்கு" என கண் வைப்பதையும் பார்த்திருக்கிறாள் அம் டெய்லர். மற்றவர்கள் தன் வாழைத் தண்டு கால்களைப் பாராட்டுவது ஒரு பக்கம் இருக்க... இந்த Blonde அழகிக்கும் தன் காலின் மீது ஒரு கண் இருந்திருக்கிறது. எனவே அசால்டாக ரூ. 280 கோடிக்கு (40 மில்லியன் டாலருக்கு) இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார்.

Julia Roberts - சிரிப்பு

Julia Roberts - சிரிப்பு

இந்த 51 வயது நடிப்பு ராட்சசியை நம்மைப் போன்ற 90-ஸ் கிட்ஸ் பார்த்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. ஆனாலும் இப்போதும் திரைத் துறையில் தனக்கான இடத்தை தன் நடிப்பில் உறுதி செய்து கொண்டே இருக்கிறார். தற்போது அமேஸான் ப்ரைமில் ஒளிபரப்பாகும் Homecoming என்கிற வெப் சீரிஸில் Heidi Bergman என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

சிரிப்புக்கு

சிரிப்புக்கு

இந்த 50 KG தாஜ்மஹால் தன் உடல் அங்கங்களை இன்ஷூர் செய்யவில்லை. மாறாக அவரின் சிரிப்பை இன்ஷூர் செய்திருக்கிறார். அதுவும் ரூ. 210 கோடிக்கு (30 மில்லியன் டாலருக்கு) இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறாராம். அப்ப நம்ம சிநேகா அக்காவும் இன்ஷூரன்ஸ் செய்யணுமே..?

பின் குறிப்பு: நம் ஹாலிவுட் நயன்தாரா ஜூலியா ராபர்ட், தன் சிரிப்பின் அழகு தன் பற்களால் பரிமளிப்பதாக நம்புகிறார். ஆகையால் பற்களை அதிகம் பராமரிப்பாராம். பற்களை அதிகம் பராமரிக்க அவர் சொல்லும் அட்வைஸ். அதிகம் பல் விலக்க வேண்டாம். Baking soda-வால் பற்களை விலக்குங்கள் என்கிறார்.

Jennifer Lopez

Jennifer Lopez

Jennifer Lopez அலைஸ் ஜெ லோ-க்கு வயசானாலும் அவளின் அழகும், ஸ்டைலும், திறமையும் குறையவே இல்லை. அம்மணியின் உதட்டுக்குக் கீழ் வலது நாசித் துவாரத்துக்கு நேராக இருக்கும் மச்சம் போல, ஜெ லோ, ரசிகர்கள் மனதிலும், இளசுகள் கனவிலும் கபாலி ரஜினி கணக்காக சேர் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அதற்கு The boy next Door,Second Act போன்ற படங்களே சாட்சி. இன்று வரை உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இருந்து வருகிறாள்.

திறமை மரியாதை

திறமை மரியாதை

ஹாலிவுட்டில் இருந்த இனவாதத்தை எல்லாம் ஒரு பக்கம் எட்டி உதைத்துவிட்டு, அக்மார்க் திறமை காட்டி முன்னேறியவள் நம் ஜெ லோ. 1997-ல் நடித்த செலீனா படம் தான் அம்மணிக்கு பெரிய பிரேக் த்ரூ. 1997 - 99 காலங்களில் நடித்த செலீனா, அனகோண்டா, அவுட் ஆஃப் சயிட் (Out of sight) என எல்லாமே விருது வாங்க வைத்தன. கூடவே ஒரு மில்லியன் சம்பளம் வாங்கும் முதல் லத்தின் அமெரிக்க நடிகை என்கிற பெயரையும் வாங்க வைத்தது. அதற்கு பின் தான் 1999-ல் மைக் மோகினியாக பாடி, அமெரிக்க இளசுகளை லத்தின் பாப்பில் கரையச் செய்கிறாள்.

200 கோடி

200 கோடி

இப்படி அளப்பரிய திறமை, அள்ள அள்ள குறையாத 34 - 26 - 37 அழகு, என எல்லாம் சேர்ந்து கொள்ள ஜெ லோவை வேறு லெவலில் தூக்கி வைத்துக் கொண்டாடியது ஹாலிவுட். ஜீரோ ஃபிட்னஸ்ஸில் கிறங்கிக் கிடந்த ஹாலிவுட்டை சப்பி கர்வி அழகிகள் பக்கம் திரும்ப வைத்ததில் நம் ஜெ லோ ஒரு முன்னோடி. அழகு = வெள்ளைத் தோல், என்றிருந்ததை உடைத்து, மாநிற மங்கைகள் மாலை வெயில் துவைத்த அழகு தான் என தன் உடல் வழி கவிதை பாடினாள். இன்று ஜெ லோவைப் பின் தொடர்ந்து தான் பல நடிகைகளும் தங்கள் பிருட்டத்தை அறுவை சிகிச்சைகள் மூலம் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இப்போதும் ஜெ லோ ஜிம்மைத் தவிர, ஆபரேஷன் கத்தி ரத்தங்களை நம்புவதில்லை. 50 வயதிலும் சிக்ஸ் பேக் உடலோடு அவளின் அழகும், ஸ்டைலும் குறையாத பெண் படையப்பா ஜெ லோ தான், தன் இடுப்பை (பிருட்டத்தை) 27 - 28.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 200 கோடிக்கு) இன்ஷூர் செய்திருக்கிறாராம்.

ஆண்கள்

ஆண்கள்

சரி இந்த பட்டியலில் ஆண்களே இல்லையா..? இருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த கால் பந்து வீரர் ரொனல்டோ தன் கால்களை சுமார் 120 மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

அதே போல மற்றொரு உலகப் புகழ் பெற்ற கால் பந்து வீரர் டேவிட் பெகம் தன் கால்களை 70 மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

அவ்வளவு ஏன் நம் ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரேய்க் கூட தன் முழு உடலையும் 9.5 மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

நெஞ்சு முடி

நெஞ்சு முடி

சரி நெஞ்சு முடியை உடல் பாகங்களில் ஒன்றாக சேர்க்க முடியுமா..? ஆனால் டாம் ஜோன்ஸ் என்கிற மனிதர் தன் நெஞ்சு முடியை 6.8 மில்லியன் டாலருக்கு 2008-லேயே இன்ஷூர் செய்திருக்கிறார்.

இதுக்கும் ஒரு படி மேலே சென்று டேவிட் லீ (David Lee Ruth)என்கிற பாடகர் தன் ஆண் உறுப்பு, விந்தணுக்களை 1 மில்லியன் டாலருக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன் (Bruce Springsteen) என்கிற பாடகர் தன் குரலை சுமார் 6 மில்லியனுக்கு இன்ஷூர் செய்திருக்கிறார்.

இன்னும் இப்படி பல உதாரணங்களைச் சொல்ல முடியும். பிரபலங்கள் நீங்களாக, பல உணவு நிறுவனங்களில் நுணுக்கமாக சுவை பார்க்கும் நபர்கள் தங்கள் நாக்கை இன்ஷூர் செய்து கொள்கிறார்கள். சரி நாம் எதை இன்ஷூர் செய்து கொள்வது..? நம் வேலையையா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

a girl insured her bum for 200 crores

a girl insured her bum for 200 crores
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more