உலகம் முழுவதுமே தற்போது ஏஐ தொழில்நுட்பங்கள் குறித்துதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சாட் ஜிபிடி போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ செயலிகளின் வருகை நம்முடைய வேலை செய்யும் போக்கையே மாற்றி இருக்கிறது. தற்போது சாட் ஜிபிடி பெரும்பாலானவர்களின் மருத்துவ ஆலோசகராகவும் நெருங்கிய நண்பராகவும் மாறி வருகிறது. இது உளவியல் ரீதியாக மனிதர்கள் மத்தியில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஏஐ செயலிகள்: பொதுமக்கள் பலரும் மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை ஏஐ செயலிகளிடம் பெற தொடங்கியிருப்பது மேலும் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. 60 வயது முதியவர் ஒருவர் சாட் ஜிபிடி யின் அறிவுரையை கேட்டு அதை பின்தொடர்ந்ததால் தற்போது மிகப்பெரிய உடல் நலக்குறைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சாட் ஜிபிடி தந்த டயட்: பிரிட்டனை சேர்ந்த அந்த 60 வயது முதியவர் தன்னுடைய உணவில் அதிகம் சோடியம் உட்கொண்டால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என படித்தாராம். இதனை அடுத்து அவர் உணவில் சோடியத்தை குறைக்க வேண்டும், ரத்தத்திலும் சோடியம் அளவை குறைக்க வேண்டும் அதற்கு என்ன மாற்று உள்ளது என சாட் ஜிபிடியிடம் கேட்டிருக்கிறார்.
அரிய வகை நோய்: அதற்கு சாட் ஜிபிடி அவருக்கு உணவு பரிந்துரை வழங்கியுள்ளது. 3 மாதங்களாக சாட் ஜிபிஐ வழங்கிய டையட் சார்ட் படி தான் இவர் உணவே எடுத்து கொண்டாராம். இந்நிலையில் திடீரென அவர் தன்னுடைய வீட்டிலேயே சுயநினைவின்றி விழுந்து கிடந்திருக்கிறார். அக்கம் பக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர்.
19ஆவது நூற்றாண்டு கால நோய்: மருத்துவமனையில் அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் அவருக்கு புரோமிசம் எனப்படும் 19 ஆவது நூற்றாண்டு கால பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது . அவரின் உடலில் புரோமைட் அளவும், எலெக்ட்ரோலைட் அளவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்ததாம்.

சித்த பிரம்மை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே அவருடைய நிலைமை இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. சித்த பிரம்மை ஏற்பட்டு மாயத் தோற்றங்கள் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். பின்னர் சோதனை நடத்தி அவரிடம் மனநல ஆலோசகரை விட்டு பேச வைத்த போது தான் உண்மை தெரிய வந்திருக்கிறது.
3 வாரம் சிகிச்சை: சாட் ஜிபிடியிடம் சோடியத்துக்கு மாற்றான உணவு கேட்ட் அது பரிந்துரை உணவினை மட்டுமே 3 மாதங்களாக எடுத்துள்ளார். அது வரை அவருக்கு எந்த வித உடல் நல பிரச்சினையும் எழுந்ததில்லை ஆனால் கடந்த சில நாட்களாகவே சோர்வு ,தூக்கமின்மை ,அதிகப்படியான தாகம் ஆகியவை ஏற்பட்டதாம்.
புரோமிஸம் பிரச்சினை: இதனை அடுத்து அவருக்கு புரோமைட் நச்சுத்தன்மை இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் அதற்கு மூன்று வார காலம் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். புரோமிஸம் என்பது 1800 மற்றும் 1900களில் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்பட்ட ஒரு வகையான வியாதி. அதாவது புரோமைட் உப்புகள் அதிக அளவில் தலைவலி சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன இதன் காரணமாக பலருக்கும் சைக்கிள் இதனால் பலருக்கும் மனநல பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் அறிவுரை: தற்போது உலகில் இந்த பிரச்சினை பெரும்பாலும் யாருக்கும் இல்லை ஆனால் இந்த முதியவருக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் இவரை போலவே சாட் ஜிபிடியிடம் சோதனைக்காக சோடியத்துக்கு மாற்று என கேட்ட போது அது புரோமைடை தான் பரிந்துரை செய்துள்ளது. எனவே மருத்துவர்கள் சாட் ஜிபிடி கூறும் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாதீர்கள் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர் .
More From GoodReturns

சிலிண்டர், பெட்ரோல் பிரச்சினையை விடுங்க.. ஏப்ரல் 1 முதல் முக்கியமான பொருளோட விலை உயர போகுது!!

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications