KFC. உலகம் முழுக்க பரவிக் கிடக்கும் ஃபாஸ்ட் ஃபுட் செயின் ரெஸ்டாரண்ட். இன்றைய நவீன ரக ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டுகள் வெறுமனே தானே நேரடியாக கடையை நடத்துவதற்கு பதிலாக, பல நாடுகளில் பிரான்சைஸுக்கு (Franchise விட்டுவிடுகிறார்கள்.
அப்படி பிரான்சைஸுக்கு விட்டிருக்கும் பல கடைகளில் "சார் வணக்கம், நான் KFC தலைமை அலுவலகத்துல இருந்து, உணவு பரிசோதனைக்கும், உணவுச் சுவை கட்டுப்பாடுகளைச் சரி பார்க்க வந்திருக்கிறேன்" எனச் சொல்கிறார் ஒரு இளைஞர்.
கடந்த ஒரு வருடமாக இலவசமாக காலையில் பிரேக் ஃபாஸ்ட் தொடங்கி, இரவு தூங்கப்போவதற்கு முன் வரை தோணும் போது எல்லாம் வெவ்வேறு KFC கடைகளுக்குச் சென்று அடித்து நொறுக்கி இருக்கிறார் ஒரு 27 வயது தென் ஆப்பிரிக்க இளைஞர்.
சந்தேகம் இல்லை
இத்தனை நாட்களாக இவருக்கு உணவு கொடுத்த KFC ரெஸ்டாரண்டுகளில் இவரை யாருமே துளி கூட சந்தேகப்பட வில்லையாம். அனைத்து KFC பணியாளர்களும், தங்கள் ரெஸ்டாரண்டின் உனவின் தரம், தங்கள் தலைமை சொன்னது போலவே சிறப்பாகச் செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே விழுந்து விழுந்து கவனித்திருக்கிறார்களாம்.
அந்த ஒரு ட்விட்
இந்த விஷயத்தை ஒரு கென்ய பத்திரிகையாளர் டெட்டீ இகுன் (Teddy Eugene) என்பவர் தான் முதன் முதலில் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விஷயத்தைச் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். அது 20,000 பேரால் ரீ-ட்விட் செய்யப்பட்டு, 42,000 பேரால் லைக் போடப்பட்டிருக்கிறது.
கைது
தற்போது இந்த ஆதாரத்தை வைத்து KFC-ல் இலவசமாகி சாப்பிட்டு வந்த தென் ஆப்பிரிக்க இளைஞரைக் கைது செய்திருக்கிறார்களாம். இந்த ட்விட்டையும் செய்தியையும் பார்க்கும் பொது மக்கள் அந்த தென் ஆப்பிரிக்க இளைஞரை வெகுவாக பாராட்டித் தள்ளுகிறார்களாம். என்ன இருந்தாலும் இவ்வளவு பெரிய கம்பெனியை ஏமாத்தி இத்தனை நாட்கள் சாப்பிட்டிருப்பது மிகப் பெரிய திறமை தானே என ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
KFC-ல் வேலை
அப்படியே பாராட்டின் ஒரு பகுதியாக "இத்தனை நாட்கள் திருட்டுத்தனமாக KFC உணவுகளைச் சுவைத்த தென் ஆப்பிரிக்க இளைஞரை இப்போது KFC உண்மையாகவே வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம்" எனவும் KFC நிறுவனத்துக்கே அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். மற்றொரு ட்விட்டர் வாசி "இந்த ஆப்பிரிக்க இளைஞரின் எதிர்பாராத திடீர் சோதனைகளால், பல்வேறு KFC கடைகளில் தங்களில் தரத்தை மேலும் நிச்சயம் மேம்படுத்தி இருப்பார்கள்" எனவே இனி நம்பி KFC-களில் சாப்பிடலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications