பிரிட்டன்: பொதுவாகவே பாஸ்வோர்ட் செட் செய்யும் போது யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் கடினமான பாஸ்வேர்டாக அதனை செட் செய்ய வேண்டும் என நமக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மிக எளிமையான பாஸ்வேர்டை வைத்ததால் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் 700 ஊழியர்கள் வேலையை இழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த போக்குவரத்து நிறுவனம் தான் கேஎன்பி லாஜிஸ்டிக்ஸ். கிட்டதட்ட 158 ஆண்டுகளாக பிரிட்டனில் இயங்கி வரக்கூடிய இந்த நிறுவனத்தில் ஹேக்கர்கள் கணினி ஒன்றை ஹேக் செய்துள்ளனர். இதற்கு காரணம் இங்கே பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தனது கணினியின் பாஸ்வேர்டை மிக எளிமையானதாக வைத்திருந்தார். அகிரா என்ற ஹேக்கர்கள் குழு அந்த வீக்கான பாஸ்வேர்டை பயன்படுத்தி இந்த நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் அனைத்து டேட்டாக்களையும் திருடி பணம் தருமாறு நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளனர் . அவர்கள் கேட்ட பணம் அதிகமாக இருந்ததால் அதனை திரட்டி கொடுக்க முடியாமல் சிக்கித் தவித்த அந்த நிறுவனம் தற்போது மூடும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 700 ஊழியர்கள் வேலையை இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் பிரிட்டன் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஹேக்கர்கள் செய்த செயலால் ஊழியர்களாலும் நிறுவனத்தாலும் அவர்களுடைய டேட்டாக்களை திரும்ப பெற முடியவில்லை. மேலும் அவர்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் ஹேக்கர்கள் கைவசம் சென்று விட்டது. இதனை திரும்ப வழங்க வேண்டும் என்றால் ஹேக்கர்கள் ஐந்து மில்லியன் பவுண்டுகளை கேட்கின்றனர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 58 கோடி ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இங்கே வேலை செய்து வந்த ஒரு ஊழியர் ஹேக்கர்களால் எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான பாஸ்வேர்டையே வைத்திருக்கிறார். அதுவே நிறுவனத்தை இழுத்து மூடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. பொதுவாகவே நாம் எந்த ஒரு பாஸ்வேர்டை அமைக்கும் போது எண்கள், எழுத்துக்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளை கொண்டு உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதற்கு இந்த நிகழ்வே காரணம். அது மட்டுமில்லாம்ல் நாம் அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுவது பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
பிரிட்டனில் இதே போல எம்&எஸ் என்ற நிறுவன கணிணி விவரங்களை ஹேக்கர்கள் திருடினர். கிட்டதட்ட 65 லட்சம் பேரின் தனிப்பட்ட விவரங்கள் இதன் மூலம் கசிந்தன. பிரிட்டன் மட்டுமல்ல உலகம் முழுவதுமே சைபர் கிரிமினல்கள் நம்முடைய தகவல்களையும் திருடும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களிடம் சிக்காமல் இருக்க நாம் வலுவான பாஸ்வேர்டை வைத்திருக்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications