லூலூ மால், தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று இருப்போம். குறைந்தபட்சம் சுற்றிப் பார்க்கவாவது சென்று இருப்போம்.
அல்லது லூலூ பெயரில், நம் ஊர்களில் இருக்கும் போலி சூப்பர் மார்க்கெட்களையாவது பார்த்து இருப்போம்.
அந்த அளவுக்கு லூலூ சூப்பர் மார்க்கெட் இந்தியா முழுக்க பிரபலம். இந்த லூலூ கம்பெனியின் தலைவர் யூசுப் அலி ஒரு இந்தியர் என்பதும் நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
லூலூ கம்பெனி
இந்த லூலூ குரூப் இண்டர்நேஷனல் என்கிற கம்பெனி, அபுதாபியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க சுமார் 188 கடைகளை திறந்து இருக்கிறார்கள். ஆசியா ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
ராஜ குடும்பம்
இன்னும் மத்திய கிழக்கு நாடுகளில் ராஜ குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்று தனி செல்வாக்கு எல்லாம் அந்த நாடுகளில் உண்டு என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? அப்படிப்பட்ட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், நம் லூலூ குரூப் இண்டர்நேஷனல் கம்பெனியில் முதலீடு செய்து இருக்கிறார்.
யார் எவ்வளவு
Sheikh Tahnoon Bin Zayed Al Nahyan என்கிற ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் லூலூ கம்பெனியில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து இருக்கிறார். இந்த ஷேக் ஐக்கிய அரபு அமீரகத்தை நிறுவிய Zayed bin Sultan Al Nahyan அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருக்கிறார்.
முதல் முறை
லூலூ குழும கம்பெனியில், ஒரு வெளி நபர் முதலீடு செய்வது, இதுவே முதல் முறையாம். முதலீடு செய்த ராஜ வம்சத்தினருக்கு, லூலூ கம்பெனியில், இந்தியாவில் செயல்படும் வியாபாரம் நீங்களாக சுமார் சுமார் 20 % பங்குகளை பெறுவார் என விஷயம் தெரிந்தவர்கள் பத்திரிகைகளுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியர்கள்
இந்த லூலூ குழுமத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் என்ன என்றால், இவர்களின் சூப்பர் மார்க்கெட்களில் வேலை பார்ப்பவர்கள் சுமார் 30,000 பேர் இந்தியர்கள் என்பது கவனிக்கத்தகக்து. இந்த 30,000 பேரில் கணிசமாக தமிழகர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. லூலூ கம்பெனிக்கு சூப்பர் மார்க்கெட் போக, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சொகுசு ஹோட்டல்களும் இருக்கிறதாம்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications