ஹிட்லர்- ன் ஸ்பெஷலான வாட்ச் ஏலத்தில் விற்பனை.. விலை என்ன தெரியுமா..? வாங்கியது யார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்தாலும், தற்போது விற்பனை செய்யப்பட்ட பழமையான வாட்ச்-க்கு பின்னால் மிகப்பெரிய சர்வாதிகாரி உள்ளார்.

 

அடால்ப் ஹிட்லர்-ன் வாட்ச் ஏலத்திற்கு வந்துள்ளது, இந்த வாட்ச்-ஐ வாங்கியது யார் தெரியுமா..?

இது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..!

அடால்ப் ஹிட்லர்

அடால்ப் ஹிட்லர்

ஒரு காலத்தில் நாஜி படையைக் கொண்டு வல்லரசு நாடுகளை மிரளவைத்த அப்படையின் தலைவர் அடால்ப் ஹிட்லர்-க்குச் சொந்தமான கைக்கடிகாரத்தை அமெரிக்காவில் இருக்கும் மேரிலாண்ட் என்னும் ஏல நிறுவனம் சுமார் 1.1 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது.

 4 மில்லியன் டாலர் மதிப்பீடு

4 மில்லியன் டாலர் மதிப்பீடு

மேலும் அமெரிக்காவின் செசபீக் நகரத்தில் உள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏல நிறுவனம் இந்த வாட்ச்-ஜ ஆய்வு செய்து 2 மில்லியன் டாலர் முதல் 4 மில்லியன் டாலர் வரையில் மதிப்பிட்டது. இந்தக் கடிகாரத்தை "இரண்டாம் உலகப் போரின் வரலாற்று நினைவுச்சின்னம்" என்றும் குறிப்பிட்டத்தக்கது.

ஜெர்மனி
 

ஜெர்மனி

ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனி-யை தலைமையாகக் கொண்டு உலகில் பல நாடுகளை மிகவும் குறுகிய காலத்தில் கைப்பற்றிய மாபெரும் வீரர். ஹிட்லர்-ஐ கண்டு உலகமே நடுங்கும் வகையில் 1933 முதல் அவர் இறக்கும் வரையிலான 1945 வரையில் மிகப்பெரிய சர்வாதிகாரியாக இருந்தார். இதேவேளையில் யூதர்களைக் கொன்று குவித்தது இன்றளவும் ஹிட்லர்-க்கு எதிரான கருத்து நிலவுகிறது.

44 வது பிறந்தநாள்

44 வது பிறந்தநாள்

ஹூபர் டைம்பீஸ்-ல் AH என்ற அடால்ஃப் ஹிட்லர் பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்வஸ்திகா சின்னம் கொண்டு உள்ளது மேலும் இது ரிவர்ஸ்சிபிள் கடிகாரமாகும். ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஹிட்லருக்கு இந்த வார்ச் ஏப்ரல் 20, 1933 அன்று அவரது 44 வது பிறந்தநாளில் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

யூத தலைவர்கள்

யூத தலைவர்கள்

யூத தலைவர்கள் உடன் பிற தரப்பினரும் அடால்ஃப் ஹிட்லருக்குச் சொந்தமான கைக்கடிகாரத்தின் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தக் கைக்கடிகாரத்திற்கு எவ்விதமான மதிப்பும் அளிக்கக் கூடாது எனவும் கூறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

ஏல நிறுவனத்தின் தலைவர் பில் பனகோபுலோஸ் பல எதிர்ப்புகளைத் தாண்டி இந்த ஏலத்தை நடத்தியதானார். சுமார் 4 மில்லியன் டாலர் வரையில் மதிப்பிடத்தக்க இந்த வாட்ச்-ஐ வெறும் 1.1 மில்லியன் டாலர் விலைக்கு ஒரு ஐரோப்பிய யூதர் வாங்கியுள்ளார் எனப் பில் பனகோபுலோஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூதர்

ஐரோப்பிய யூதர்

1945 ஆம் ஆண்டு மே மாதம் ஹிட்லரின் பெர்ச்டெஸ்கடன் தோல்வியைத் தொடர்ந்து அவரை நெருங்கிய முதல் ராணுவ பிரிவில் இருந்த ஒரு பிரெஞ்சு ராணுவ வீரர் தான் இந்த வாட்ச் கைப்பற்றியதாகவும், இந்த வாட்ச்-ஐ தற்போது, ஏல நிறுவனம் கைப்பற்றி விற்பனை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adolf Hitler's watch sells for $1.1 million at auction; Guess who brought it

Adolf Hitler's watch sells for $1.1 million at auction; Guess who brought it ஏலத்திற்கு வந்த ஹிட்லர்-ன் வாட்ச்.. வாங்கியது யார் தெரியுமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X