Chess விளையாட்டுக்கு தடை விதித்த தாலிபன்கள்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தாலிபன் அமைப்பினர் அந்நாட்டில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தாலிபன்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய நடைமுறைகளுக்கு எதிரானது என கூறி அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

தாலிபன்கள் ஆட்சியில் பெண்கள் கல்வி கற்க கூடாது , வீட்டை விட்டு வெளியே வர கூடாது, பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்த தடை என்பன உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தாலிபன் அரசு திடீரென ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சதுரங்கத்தை ஹராம் எனக்கூறி தடை செய்திருக்கிறது.

Chess விளையாட்டுக்கு தடை விதித்த தாலிபன்கள்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ!!

அதாவது சதுரங்க விளையாட்டு இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாகவும் சூதாட்டத்தோடு தொடர்புடையதாகவும் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாலிபன்களின் "நாட்டில் நற்பண்புகளை ஊக்குவிக்கும் மற்றும் தீயனவற்றை தடுக்கும் அமைச்சகம்" இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்த சதுரங்க சம்மேளனமும் தற்போது கலைக்கப்பட்டு இருக்கிறது. டோலோ நியூஸ் என்ற தளம் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

தாலிபனின் விளையாட்டு இயக்குனரகம் காலவரையின்றி சதுரங்க போட்டி தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளதாம். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். இதனை அடுத்து அங்கே பல்வேறு சட்ட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பொதுமக்களுக்கான பல்வேறு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. பெண்களுக்கான சுதந்திரம் பெரிய அளவில் பறிக்கப்பட்டிருக்கிறது. ஷரியா சட்டத்தை அவர்கள் மிகக் கடுமையாக அமல்படுத்தியுள்ளனர். தாலிபன்கள் அரசாங்கம் கொண்டு வந்திருக்கக் கூடிய பல்வேறு சட்டங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பெண்களும் சிறுமிகளும் தங்களுக்கான உரிமைகளை இழக்கும் வகையில் தாலிபன்கள் தங்களுடைய சட்ட திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இசை மற்றும் இசைக்கருவிகளுக்கு தடை: ஆப்கானிஸ்தானில் அனைத்து பொது இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2023 ஜூலை மாதத்தில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்தது. அப்போது தாலிபன்கள் இசை கருவிகளை எரித்து நாட்டில் இசை ஒழுக்கக்கேட்டை ஊக்குவிப்பதாகவும் ஊழலை கொண்டு வருவதாகவும் கூறினர்.

பட்டம் பறக்க விடுவது மற்றும் புறாக்களை வளர்ப்பதற்கு தடை: ஆப்கானிஸ்தானில் பட்டங்கள் விடுவதும் புறாக்களை வளர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கே பட்டங்கள் விடுவதும், புறாக்கள் வளர்ப்பதும் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். ஆனால் இவை மத கடமைகளில் இருந்து இளைஞர்களை திசைத்திருப்பதாக கூறி தாலிபன்கள் இவற்றை சட்டவிரோதம் என அறிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் ஊடகம்: இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு தகவலும் ஊடகங்களில் ஒளிபரப்பாகாத வகையில் தாலிபன்கள் தடைகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் திரைகளில் தோன்றி நடித்து வந்த தொடர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன . பெண்கள் திரைகளில் தோன்றும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் அனுமதிப்பது கிடையாது. இசை மற்றும் நகைச்சுவை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்கள்: கடைகள் மற்றும் ஊடகங்கள், விளம்பரங்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சித்தரிப்புகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக புகை படம் எடுப்பது கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெண்கள் கல்வி: பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி பயில்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி பல்வேறு மாகாணங்களில் பெண்களுக்கு இருந்த தொழில் பயிற்சி திட்டங்கள் கூட நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

Chess விளையாட்டுக்கு தடை விதித்த தாலிபன்கள்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ!!

வேலை வாய்ப்பு: பெரும்பாலான ஆப்கானிஸ்தானிய பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி செய்து வந்த பெண்கள் பணி செய்ய பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தனியே வரக் கூடாது: பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவர்களோடு ஒரு ஆண் துணை நிச்சயமாக வர வேண்டும் என்றும் மேலும் பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் ஆடை: பெண்கள் கண்டிப்பாக பர்தா எனப்படும் அந்த முழு ஆடை அணிந்து கொண்டுதான் வெளியே வரவேண்டும் அவ்வாறு வரவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் அவர்களுடன் வரக்கூடிய ஆண் துணைக்கும் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.

அழகு நிலையங்களுக்கு தடை: 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் பார்லர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் பார்லர் போன்ற வசதிகளை பயன்படுத்த முடியாது.

மருத்துவ சேவை: பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறக் கூடாது என்ற ஒரு தடையும் அங்கே அமலில் இருக்கிறது. ஏற்கனவே பெண்கள் கல்வி பயில தடை உள்ளது, இன்னும் சில ஆண்டுகளில் இங்கே பெண் மருத்துவர்களே இருக்க மாட்டார்கள். அந்த சூழலில் பெண்களுக்கு மருத்துவ சேவை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும்.

பெண் செய்தியாளர்: பெண்கள் செய்தியாளர்களாக பணிபுரியும் பட்சத்தில் தங்களுடைய முகத்தை மூடிக்கொண்டுதான் அவர்கள் செய்திகளை வழங்க வேண்டும் என சொல்லப்படுகிறது. தாலிபன்கள் அச்சுறுத்தலால் செய்தி பணியில் இருந்த பெண்கள் பலரும் தங்கள் வேலையையே விட்டு விட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறின. இதனை அடுத்து தாலிபன் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதலே பெண்களுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது எனக்கூறி அடிப்படை சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் தாலிபன்கள் பறிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் ஐநா உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் தாலிபன்கள் சர்வதேச விதிகளை மீறியும் அடிப்படை மனித உரிமைகளை மீறியும் செயல்படுகின்றனர் என தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் . பெண்களுக்கு கல்வியே சிறந்த சொத்து என கூறி உலகம் முழுவதும் பெண்கள் கல்விக்கும் வேலைக்கு செல்வதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலைமை தலைகீழாக உள்ளது. படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் கனவுகள் கலைந்து போயுள்ளன.

Take a Poll

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+