கொரோனா தொற்றுக்குப் பின் அமெரிக்காவின் பல முன்னணி டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் அமெரிக்க அரசிடம் இருந்து பல முக்கியத் திட்டங்களைப் பெற்றது.
இது மட்டும் அல்லாமல் கிளவுட் சேவையிலும், எண்டர்பிரைசர்ஸ் வர்த்தகத்திலும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் மைக்ரோசாப்சட் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் மூலம் தற்போது புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
2 டிரில்லியன் டாலர் கிளப்
சர்வதேச பங்குச்சந்தையில் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்த நிறுவனங்கள் பல இருந்தாலும், 2 டிரில்லியன் டாலர் அளவீட்டை கடந்த நிறுவனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை 2 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்டது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தாக, தொடர் வர்த்தக வளர்ச்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்புத் தற்போது 2 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகளின் மதிப்பு 1.2% வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 265.51 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஆரம்கோ
இதன் மூலம் 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு பட்டியலில் ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில், டிசம்பர் 2019ல் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ஆரம்கோ 1.9 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா
2014ல் சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராகப் பதிவியேற்றிய பின்பு இந்நிறுவனத்தின் வர்த்தகம் என்பது பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, புதிதாகப் பல துறையில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
கிளவுட் சேவை
குறிப்பாகக் கிளவுட் சேவையில் அமேசான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் பல முன்னணி நிறுவனங்களுடன் கிளவுட் சேவைக்காகக் கூட்டணி வைத்துள்ளது மைக்ரோசாப்ட்.
பில் கேட்ஸ் பிரச்சனை
இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் விவாகரத்து, நிர்வாக விசாரணை முடிவுகள், முறையற்ற உறவு எனப் பல பிரச்சனைகள் வெளியாவதற்கு முன்பாகவே கேட்ஸ் நிர்வாகக் குழுவில் இருந்து முழுமையாக விலகினார். இதனால் மைக்ரோசாப்ட் பெறும் சரிவில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளது.
2021ஆம் ஆண்டு வளர்ச்சி
2021ல் மட்டும் மைக்ரோசாப்ட் பங்குகள் சுமார் 19 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஆப்பிள், அமேசான்.காம் போன்ற நிறுவனங்களை முந்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல முன்னணி முதலீட்டாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்ட கால முதலீட்டை செய்துள்ளனர். இதனால் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications