கொரோனா பெருங்தொற்று காலத்தை உலகம் அத்தனை எளிதாக மறந்து விட முடியாது. கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகினர் .அது மட்டும் இன்றி இலட்சக்கணக்கான உயிர்களையும் இந்த வைரஸ் பறித்து சென்றது.
கொரோனா: மீண்டும் கொரோனா போன்ற ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் பெரும்பாலான மக்களின் வேண்டுதலாக இருக்கிறது .கொரோனா சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவியது. இந்த சூழலில் சீனாவில் மற்றொரு வைரஸ் வேகமாக பரவி பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

காய்ச்சல் பரவல்: குவாங்டுவாங் மாகாணத்தில் இருக்கும் ஃபோஸான் நகரில் 7000க்கும் அதிகமானவர்களுக்கு திடீரென சிக்கன்குன்யா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் இந்த காய்ச்சல் பரவும் விகிதம் மிக வேகமாக இருக்கிறது என்பது சர்வதேச அளவில் பெரிய கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சீன அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் படி ஒரே வாரத்தில் ஃபோஸான் நகரில் 2940 பேருக்கு சிக்கன் குன்யா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம்.
பயண எச்சரிக்கை: பொதுமக்கள் இந்த நகரத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் , மிக மிக அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே அங்கே செல்லுங்கள், அப்படி செல்பவர்கள் கூட பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொசு மூலமாக பரவக்கூடியது தான் சிக்கன் குன்யா வைரஸ் காய்ச்சல்.

சிக்கன்குன்யா வைரஸ்: சிக்கன்குன்யா என்பது உலகிற்கு புதிதல்ல. இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும் கூட சிக்கன்குன்யா வைரஸ் பரவி இருக்கிறது. ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் காய்ச்சல் இது. ஏடிஸ் கொசு நம்மை கடித்து வைரஸ் நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அடுத்து 3 முதல் 7 நாட்களில் அறிகுறிகள் தென்பட்டுவிட தொடங்கும்.
என்ன அறிகுறி: சிக்கன்குன்யா வைரஸ் பரவி விட்டால் தீவிர காய்ச்சல், மூட்டு வலி ,தலைவலி, உடல் வலி, மூட்டுகளில் வீக்கம் என பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன . தமிழ்நாட்டிலும் கூட மழை காலங்களில் சிக்கன்குன்யா பரவும். கொசு மூலம் பரவக்கூடிய வைரஸ் என்பதால் மிக எளிதாக வயதானவர்கள் குழந்தைகள் இதில் பாதிக்கப்படுகின்றனர் .
இறப்பு அரிதானது: இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் விகிதம் மிகவும் அரிதானது தான் என்றாலும் இதய நோய் இருப்பவர்கள் ,நீரிழிவு நோய் இருப்பவர்கள் நிலைமை சற்றே மோசமடையலாம் என சீன அரசாங்கம் தெரிவித்திருக்கிறது . இந்த சிக்கன் குன்யா வைரஸால் வரக்கூடிய மூட்டு வலி என்பது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
கொசு மூலம் பரவுகிறது: சிக்கன் குன்யாவை பொறுத்த வரை இதற்கென பிரத்தியேக சிகிச்சை எதுவும் கிடையாது இந்த அறிகுறிகளை மட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் மட்டும்தான் இருக்கின்றன. அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகள் சிக்கன்குன்யா வராமல் தடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கொசு உற்பத்தியானால் சிக்கல்: சிக்கன்குன்யா பரவலை தடுக்க கொசு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த வகை வைரஸை பரப்பும் கொசு நல்ல தண்ணீரில் வளர்க்கூடியது என்பது பெரிய சிக்கல். எனவே வீட்டில்யே பூந்தொட்டிகள், குளிர்பதன பெட்டியில் தேங்கும் நீர், தேவையற்ற டிரம், பானைகளில் தேங்கும் தண்ணீரில் இவை எளிமையாக உற்பத்தியாகிவிடுகின்றன.
அரசு நடவடிக்கை: சீன அரசு கொசு லார்வாக்களை உண்ணும் மீன்களை குளம், குட்டைகளில் நிரப்பி வருகிறது, மக்கள் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள அறிவுரை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு கொசு வலை மூலம் பாதுகாக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் இருக்கிறது: 1955 ஆம் ஆண்டு தான் முதன் முறையாக சிக்கன் குன்யா வைரஸ் தான்சானியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா உட்பட 110க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவுகிறது. சீனாவில் இருந்து ஹாங்காங் வந்த சிறுவனுக்கு சிக்கன்குன்யா பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications