புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் 'ஆஸ்திரேலியா' குடியுரிமை பெறுவது எப்படி என்று தெரியுமா..?

புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆஸ்திரேலியா குடியுரிமை பெறுவது எப்படி என்று தெரியுமா..?

ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்பல் 457 விசாவிற்குத் தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலியா குடியுரிமை பெறும் விதிகளையும் கடுமையாக்கி உள்ளார். இந்தப் புதிய விதிகளின் படி வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா குடியுரிமை பெறுவது மிகவும் கடனமாகப் பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் இனி ஆஸ்திரேலியா குடியுரிமை பெற வேண்டும் என்றால் ஆங்கில அறிவும் முக்கியம், அதுமட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவைப் பற்றியும் அதன் மதிப்பு பற்றியும் அதற்குக் களங்கம் விளைவிக்காமல், அதை முழுமையாக விளக்கும் அறிவுடன் இருக்கும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும்.

காத்திருப்புக் காலம் அதிகரிப்பு

காத்திருப்புக் காலம் அதிகரிப்பு

டர்ன்பல் குடியுரிமை விதிகளை மேலும் கடுமை படுத்தும் விதமாக ஏப்ரல் 20=ம் தேதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமான ஒன்று விண்ணப்பித்தவர்களுக்கான காத்திருப்புக் காலத்தை அதிகரித்துக் குடியுரிமை அளிப்பதைத் தாமதப்படுத்துவதாகும்.

மூன்று வாய்ப்புகள்

மூன்று வாய்ப்புகள்

ஆஸ்திரேலியா குடியுரிமைக்காக விண்ணப்பித்து ரத்தானால் எத்தனை முறை வேண்டுமானாலும் முன்பு விண்ணப்பிக்க முடியும். அதை இப்போது மூன்று முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று விதிகள் கடுமை படுத்தப்பட்டுள்ளது. இதனை அடித்து ஒருவரின் விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டால் அதற்குப் பிறகு விண்ணப்பிக்க முடியாது.

நிரந்தரக் குடியிருப்பாளர்கள்

நிரந்தரக் குடியிருப்பாளர்கள்

ஆஸ்திரேலியா குடியுரிமை ஒருவர் பெற வேண்டும் என்றால் குறைந்தது 4 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியிருப்பாளராக இருந்து இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவின் மதிப்பிற்குக் களங்கம் விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.

தேர்வில் மாற்றம்

தேர்வில் மாற்றம்

ஆஸ்திரேலியா குடியுரிமை விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்படும் தேர்வில் ஆஸ்திரேலியா சட்டங்கள், கொடி மற்றும் சின்னங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கப்படும். அது மட்டும் ஆஸ்திரேலியாவின் மதிப்புகள் பற்றியும் கேள்விகள் இருக்கும்.

ஆஸ்திரேலியா மதிப்புகள்

ஆஸ்திரேலியா மதிப்புகள்

ஆஸ்திரேலியா மதிப்புகள் குறித்த தேர்வில் விண்ணப்பதாரர் மதச் சுதந்திரம் மற்றும் பாலின் சமத்துவம் பெற்றி விளக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளை எப்படி மதிக்க வேண்டும், குழந்தைகள் திருமணம், பெண் பிறப்புறுப்புச் சிதைவு மற்றும் வீட்டு வன்முறை பற்றிய கேள்விகளுக்கு எல்லாம் அதில் அளித்தல் வேண்டும். இது போன்று அனைத்து விதிகளையும் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே ஆஸ்திரேலியா குடியுரிமை அளிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+