அமெரிக்கா: அமெரிக்க டெக் நிறுவனங்களில் எல்லாம் தலைமை பதவிகளில் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் இருக்கின்றனர். அந்த வகையில் பெரிய நிறுவனங்களில் முக்கிய பணியாற்றிய ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பிரபாகர் ராகவன் டெக் உலகின் மிகவும் புகழ்பெற்ற பெயர் இது. கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இவர் செயல்பட்டு வருகிறார். கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு நெருக்கமானவராக இருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் ஐஐடி மெட்ராஸில் பிடெக் படிப்பை முடித்தார் . பின்னர் அமெரிக்கா சென்ற அவர் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து பெரிய நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்தார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தேடு பொறிகள் ,தரவுத்தளங்கள் மற்றும் அல்காரிதங்கள் குறித்து ஆய்வு நடத்தி பல்வேறு புதிய விஷயங்களை கொண்டு வருவதில் திறமை பெற்றவர் தான் பிரபாகர் ராகவன். சென்னையை சேர்ந்த இவர் , டெக் உலகில் அசைக்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார். யாகூ, ஐபிஎம் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார் .
ஐபிஎம் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு . பின்னர் யாகூ நிறுவனத்திலும் இவர் பணிக்கு சேர்ந்தார் . யாகூ நிறுவனத்தில் இவர் யாகூ ரிசர்ச் லேப் என்பதை உருவாக்கி அதற்கு தலைமை பொறுப்பு வகித்தார். பின்னர் யாகூவில் பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை பதவி வகித்தார். பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் முக்கிய பணியாற்றிய இவருக்கு 2012 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே இவரது திறமையை உணர்ந்த கூகுள் தலைமை இவருக்கு விளம்பரங்கள் மற்றும் வர்த்தக பிரிவின் தலைவராக பொறுப்பு வழங்கியது. பின்னர் கூகுளில் செயலிகள், கிளவுட் உள்ளிட்ட பிரிவுகளுக்கெல்லாம் தலைமை பொறுப்பு வகித்தார். கூகுள் நிறுவனத்தின் தேடல் மற்றும் அசிஸ்டன்ட் பிரிவு தலைவராக 2020 ஆம் ஆண்டு இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் .
அல்காரிதங்கள் குறித்த பரந்த ஆய்வு நடத்தி இரண்டு நூல்களை இவர் எழுதி இருக்கிறார் . ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார். கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையே "தற்போது உலகத்தில் இருக்கும் முக்கியமான பொறியாளர்களில் பிரபாகரனும் ஒருவர்" என புகழ்ந்து பேசி இருக்கிறார்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications