சென்னைக்கு மட்டுமில்லைங்க அக்டோபர் 15,16ஆம் தேதி பாகிஸ்தானிலும் ரெட் அலர்ட்!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான soc நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக பாகிஸ்தான அரசு மாநாடு நடைபெறக்கூடிய தலைநகர் இஸ்லாமாபாத்தில் ராணுவ பாதுகாப்பை வழங்கியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளின் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சென்னைக்கு மட்டுமில்லைங்க அக்டோபர் 15,16ஆம் தேதி பாகிஸ்தானிலும் ரெட் அலர்ட்!!


இந்த அமைப்பின் மாநாட்டினை வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான் கிர்கிஸ்தான் சார்பாக அந்த நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கின்றனர். ஈரான் சார்பில் முதன்மை துணை அதிபர் கலந்து கொள்கிறார். அது தவிர மங்கோலிய பிரதமர் பார்வையாளராகவும் துர்க்மேனிஸ்தான் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இடையிலான பொருளாதாரம், ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுச்சூழல், சமூக கலாச்சார ஒத்துழைப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது. பாகிஸ்தான் அரசு இதற்காக இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பினை தவிர ராணுவ பாதுகாப்பையும் கொண்டு வந்திருக்கிறது. அண்மையில் பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் இம்ரான் கான் கட்சியினரின் போராட்டங்கள் காரணமாக பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு போட்டிருக்கிறது.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கிட்டத்தட்ட 10,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இரண்டு நகரங்களின் பாதுகாப்பு முழுவதுமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவல்துறையினரும், உள்ளூர் பாதுகாப்பு படையினரும் ராணுவத்தினரின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை இந்த இரண்டு நகரங்களிலும் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் பிற கிளப்புகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை ஏற்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டினை சேர்ந்த யாரும் தங்கவில்லை என்பது குறித்து அதன் உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் பத்திரம் எழுதி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அது போக இரண்டு நகரங்களிலும் அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் இஸ்லாமாபாத்தில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பெரிய வன்முறை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் அரசினை பொறுத்தவரை இந்த மாநாட்டை எந்த வித இடையூறும் இல்லாமல், வெளிநாட்டு தலைவர்களின் பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லாமல் நடத்த வேண்டிய கடமை இருக்கிறது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+