வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் புது புது கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு AI ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நிறுவனம் 100 ஊழியர்கள் செய்யக்கூடிய வேலையை AI ஏஜெண்டுகளால் செய்ய முடியும் என்று கூறி அதிரடி கிளப்பியுள்ளது.
CozmoX என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான நுஹா ஹாஷேம், கலீஜ் டைம்ஸ் என்ற துபாய் பத்திரிக்கையிடம், AI ஏஜெண்டுகளால் 100 ஊழியர்களின் வேலையை எளிதில் செய்ய வைக்க முடியும். இதனால் மனிதர்களை வேறு முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த வைக்கலாம் என்று கூறியுள்ளார். இவருடைய கூற்று வணிக உலகில் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தங்களிடம் உள்ள டேட்டாக்களை பயன்படுத்தி ஒரே ஒரு நாளுக்குள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கக்கூடிய AI ஏஜெண்டுகளை உருவாக்க முடியும். இந்த AI ஏஜென்ட்களின் உற்பத்தி திறன் 100 மனித ஊழியர்களுக்கு சமமாக இருக்கும் என்றும் நுஹா தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தில்.. ஒரு நாளைக்கு 10,000 அழைப்புகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்கு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் சேர்த்து ஒரே ஒரு ஏஐ ஏஜென்டால் செய்ய முடியும். தற்போது இதை பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம் என்று நுஹா தெரிவித்துள்ளார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த காஸ்மோஎக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவில் பிறந்தவர். இந்தியாவில் பிறந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்துக் கொண்டிருக்கும் அலோக் குமார் தான் இந்நிறுவனத்தின் சிஇஓ. மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்கள் பட்டியலில் அலோக் குமாரும் இடம் பெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் AI ஏஜெண்டுகள் வழக்கமான விஷயமாக மாறிவிடுவார்கள். ஏற்கனவே காஸ்மோஎக்ஸ் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஏஐ ஏஜெண்டுகள் சில நிறுவனங்களுக்கு மாத மாதம் நூற்றுக்கணக்கான டாலர்களை சேமிக்க உதவி வருகிறது. சில நேரங்களில் மாதம் 1 லட்சம் டாலர் வரையில் நிறுவனங்கள் சேமிக்கிறது. இது இந்திய மதிப்புக்கு 85 லட்சம். பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் சேல்ஸ், கஸ்டமர் சப்போர்ட் போன்ற அனைத்து பணிகளையும் இந்த AI ஏஜெண்டுகளால் செய்ய வைக்க முடியும் என்று அலோக்குமார் கூறியுள்ளார்.
ஏஐ ஏஜென்ட்களால் வேலை வாய்ப்புகள் குறையுமா? என்ற கேள்விக்கும் அலோக் குமார் பதில் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காஸ்மோஎக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கஸ்டமர் சப்போர்ட், கடன் வசூல் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது. இவை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் இயல்பாக உரையாடக் கூடிய திறன் கொண்டவை.
இந்த பணிகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஆயிரக்கணக்கான மணி நேரங்களை சேமிக்கவும், மில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்கவும் உதவும் ஒரே ஒரு ஏஜென்ட் மூலம் சில நிமிடங்களில் நிறுவனங்களின் வேலையை செய்து கொள்ள முடியும். இதன் காரணமாக ஊழியர்கள் பிற வேலைகளில் கவனம் செலுத்தலாம். இதனால் ஒவ்வொரு ஊழியரின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று அலோக்குமார் பகிர்ந்திருக்கிறார்


Click it and Unblock the Notifications