டிஜிட்டல் + AI.. 5 வாரங்களில் 145 வங்கி கிளைகள் மூடிய முன்னணி வங்கி.. ஊழியர்கள் ஷாக்..!!

அமெரிக்கா: அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய பிரதான வங்கிகள் கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் தங்களுடைய 145 கிளைகளை மூடியிருப்பது தெரிய வந்துள்ளது.

டெய்லி மெயில் என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய பேங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் ஃபார்கோ உள்ளிட்ட பிரதான வங்கிகள் 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை நாட்டில் செயல்பட்டு வந்த 145 வங்கி கிளைகளை மூடி இருக்கின்றன.

டிஜிட்டல் + AI.. 5 வாரங்களில் 145 வங்கி கிளைகள் மூடிய முன்னணி வங்கி.. ஊழியர்கள் ஷாக்..!!

பொதுவாக அமெரிக்காவில் செயல்படக்கூடிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடும் போது அல்லது குறிப்பிட்ட சில செயல்பாட்டை நிறுத்தும் போது கண்டிப்பாக அது குறித்த விவரங்களை அரசிடம் தெரிவித்தாக வேண்டும்.

அந்த வகையில் அமெரிக்காவின் ஓசிசி என்ற அமைப்பு வாரந்தோறும் இந்த விவரங்களை வெளியிடும். இதன்படி ஃபிளாக்ஸ்டார் பேங்க் அதிகபட்சமாக 44 வங்கி கிளைகளை மூடி இருக்கிறது. அதேபோல டிடி வங்கி 38 இடங்களில் செயல்பட்டு வந்த வங்கி கிளைகளை மூடி இருக்கிறது. இவ்வாறு வங்கிகள் தங்களுடைய கிளைகளை மூடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.

2024-ஆம் ஆண்டிலும் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு வங்கிகளும் தங்களுடைய வங்கி கிளைகளை மூடியுள்ளன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் அமெரிக்கா அதிகபட்சமாக 168 வங்கிகளை மூடியது. யூஎஸ் பேங்க் 156 வங்கிக் கிளைகளையும், வெல்ஸ் ஃபார்கோ 126 வங்கி கிளைகளையும் மூடியுள்ளன. சேஸ் என்ற வங்கி 103 வங்கி கிளைகளை மூடி இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 2024 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 1043 வங்கி கிளைகள் மூடப்பட்டு அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐந்து வாரங்களிலேயே 145 வங்கி கிளைகள் மூடப்பட்டிருப்பதால் 2025 ஆம் ஆண்டு வங்கி துறையை பொறுத்தவரை மிகவும் சவால் மிகுந்த ஆண்டாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. பல்வேறு வங்கி செயல்பாடுகளும் டிஜிட்டல் முறையில் மாறி இருப்பதே இவ்வாறு வங்கிகள் தங்களுடைய கிளைகளை மூடுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சேவைகளை டிஜிட்டல் செயலி வாயிலாகவே மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக மக்கள் நேரடியாக வங்கிகளுக்கு வந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்வது என்பது கணிசமான அளவு குறைந்துவிட்டது.

மேலும் பணம் போடுவது பணம் எடுப்பது ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை மாற்றுவது என அனைத்து சேவைகளையும் செல்போன் வாயிலாக செய்து கொள்ள முடிவதால் பணமில்லாத ஒரு சமூகமாக அமெரிக்கா மாறி வருகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வங்கிகள் தற்போது டிஜிட்டல் கட்டமைப்புகளில் பெரும் அளவு கவனம் செலுத்துவதன் காரணமாக மற்ற செலவினங்களை குறைத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே வங்கி கிளைகள் மூடப்படுவது மற்றும் வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட காரணம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு திடீரென வங்கி கிளைகளை மூடுவதால் டிஜிட்டல் செயலிகளை பயன்படுத்தத் தெரியாத வயதானவர்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிரமம் அடைவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+