துபாயை சேர்ந்த ஒரு மருத்துவர் கூடிய விரைவில் என்னுடைய வேலையை ஏஐ எடுத்துக் கொள்ளப் போகிறது நான் மெக்டொனால்ட்ஸில் வேலைக்காக விண்ணப்பம் செய்யப் போகிறேன் என வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
தற்போது ஜெனரேட்டி ஏஐ தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளிலும் கால் பதிக்க தொடங்கிவிட்டன. குறிப்பாக மருத்துவ துறைகளில் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நுரையீரல் நிபுணராக கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மருத்துவர் முகமது ஃபவ்ஸிக் கட்ராஞ்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கூடிய விரைவில் என்னுடைய வேலையை செய்யப் போகிறது நான் மெக் டொனால்ட்ஸில் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என காமெடியாக பதிவு செய்திருக்கிறார்.

18 ஆண்டுகாலம் நுரையீரல் நிபுணராக வேலை செய்து வரும் இவர் கிரிட்டிக்கல் கேர் மற்றும் தூக்க மருந்து ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் அதில் ஒரு எக்ஸ்ரேவை பதிவு செய்து ஒரு ஏயை கருவியில் அப்லோடு செய்து அந்த எக்ஸ்ரேவை அடிப்படையாகக் கொண்டு என்ன மாதிரியான பகுப்பாய்வினை ஏஐ செய்கிறது அதுவும் தன்னுடைய ஆய்வும் ஒன்றாக இருக்கிறதா என ஆய்வு செய்தாராம்.
ஆச்சர்யமளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட அந்த கருவி என்னை போலவே திறமையாக செயல்பட்டு அந்த எக்ஸ்ரேவில் இருக்கும் விஷயங்களை ஆய்வு செய்து தகவல்களை வழங்குகிறது. குறிப்பாக நோய் என்ன என்பதை கண்டறிந்துவிட்டது எனக் கூறியிருக்கிறார். கூடிய விரைவில் நான் என்னுடைய வேலையை இழக்க போகிறேன், இந்த திறமையை வளர்த்துக் கொள்ள எனக்கு 20 ஆண்டுகாலம் தேவைப்பட்டத
ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமோ அதை சில நொடிகளுக்குள் செய்து முடிக்கிறது நிச்சயமாக நான் என்னுடைய வேலையை இழக்க போகிறேன் மெக் டொனாலாட்ஸில் வேலை விண்ணப்பம் செய்யப் போகிறேன் என பதிவு செய்திருக்கிறார். மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத் துறையிலும் வேகமாக வளர்ந்து வருகிறது அதனை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருக்கிறார் அவருடைய இந்த வீடியோ பலரது பார்வைகளையும் பலரது கருத்துக்களையும் பெற்று இருக்கிறது.
ஒரு பயனர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறிப்பிட்ட சில விஷயங்களை குறிப்பிட்ட சில நோய்களை எளிதாக கண்டறிய உங்களுக்கு உதவும் எனவே ஒரு நோயாளியை கண்டு அவருக்கான நோய் அறிதலை மேற்கொள்வதற்கு தற்போது உங்களுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை குறைக்கும் இதன் மூலம் நீங்கள் கூடுதலான நோயாளிகளை பார்க்க முடியும் என தெரிவித்திருக்கிறார் .


Click it and Unblock the Notifications