வாசிங்டன்: உலகின் பிரபல விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் டைகர் உட்ஸ் (TiGer Woods). இவர் உலகின் முன்னணி கோல்ஃப் விளையாட்டு வீரர்.
உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை கடந்த 2018-ம் ஆண்டுக்கும் வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் நிறுவனம். அதில் 16-வது இடத்தில் இருக்கிறார்.
நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger) என்கிற 24 வயது இளைஞர் டைகர் உட்ஸின் தி உட்ஸ் ஜுபிட்டர் உணவகத்தில், பார் டெண்டராகத் தான் வேலை பார்த்து வந்தார்.
குடி
நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger) வழக்கம் போல தன் வேலையை மதியம் 3 மணி அளவில் முடித்து விட்டு குடிக்கத் தொடங்கி இருக்கிறார். அளவுக்கு மீறி தனக்கு போதும் எனத் தோன்றும் வரை குடித்து முடித்த பின் தன் காரில் அமர்ந்து ஓட்டத் தொடங்கி இருக்கிறார்.
3 மடங்கு அதிகம்
நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger) அமெரிக்க காவல் துறை அனுமதித்திருக்கும் அளவை விட 3 மடங்கு கூடுதலாக மது அருந்தி இருக்கிறார். நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger) இறந்த பின் அவர் உடலில் மது அளவைச் சோதனை செய்த போது, நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger) உடலில் 0.256 அளவு மது இருந்ததாம்.
தவறு
அதோடு 77 மைல் வேகத்தில் தன் காரில் பறந்திருக்கிறார். நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger) பயணித்த சாலை 55 மைல் வேகத்தில் மட்டுமே கார்களை இயக்க வேண்டிய லேன்களாம். அந்த் லேனில் குறிப்பிட்ட வேகத்தை விட வேகமாக காரைச் செலுத்தி விபத்துக்கு உள்ளாகி இறந்திருக்கிறார். அதிகம் மது அருந்தி இருந்ததால், நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger)-க்கு நிதானம் இல்லாமல் போனது. எனவே அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்திலேயே இறந்தும் போனார்.
பெற்றோர் வழக்கு
நிகோலஸ் இம்மெஸ்பெர்கர் (Nicholas Immesberger)-ன் பெற்றோர்கள் தங்கள் மகன் இறப்புக்கு டைகர் உட்ஸும், அவரது மனைவி மற்றும் தி டைகர் உட்ஸ் ஜுபிட்டர் உணவகத்தின் பொது மேலாளர் எரிகா ஹெர்மன்னும் தான் காரணம். என் மகனின் குடிப் பழக்கத்தை கருத்தில் கொண்டு, அவனை அளவாக குடிக்க வைத்து ஒழுங்காக வீட்டுக்கும் அனுப்பி வைத்திருக்க வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறார். தற்போது டைகர் உட்ஸ் பிஜிஏ சாம்பியன்ஷிப் எனும் கோல்ஃப் விளையாட்டின் மிக முக்கியமான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications